Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணபதி ஹோமமும்.. வார் ரூமும்.. திமுக, அதிமுகவை.. ஒருசேர உலுக்கும் அய்யாவு மஹால்.. அண்ணாமலை பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்குமான தேர்தல் தலைமையகத்தை சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் அமைத்துள்ளது தமிழக பாஜக. 39 தொகுதிகளிலிருந்து வரும் பிரச்சனைகளை தீர்க்க இந்த தலைமையகம் செயல்படும்.

லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் 25 தொகுதியில் பாஜக போட்டி போடும் என்று திட்டமிட்டுள்ளதாம். நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் இதை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

BJP planning huge for Lok Sabha elections with new War room in new locations

தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடும். கண்டிப்பாக இந்த முறை பாஜக மாபெரும் வெற்றியை பதிவு செய்யும். நெல்லை தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தினால் நிற்பேன் என்று அறிவித்துள்ளார்.

கூட்டணி; மத்தியில் ஆளும் பாஜக தமிழ்நாட்டில் இன்னும் கூட்டணியை அறிவிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. கூட்டணி தொடர்பான முடிவுகள் எதையும் பாஜக இன்னும் எடுக்கவில்லை. ஐஜேகே போன்ற சிறிய கட்சிகள் மட்டுமே பாஜக கூட்டணியில் இதுவரை இணைந்துள்ளது.

அடித்து ஆடும் பாஜக - பிரச்சாரம்: இப்படிப்பட்ட நிலையில்தான் ஆளும் திமுகவிற்கு எதிராக பாஜக சார்பாக சமூக வலைத்தளங்களில் கடுமையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக தீவிரமான ஐடி விங் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ், மீம் வீடியோ, டிரெண்டிங் விஷயங்களை வைத்து திமுகவை கிண்டல் செய்வது என்று பாஜக டிரெண்டு செய்து கொண்டு இருக்கிறது. உதாரணமாக டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு உதவிய அதே டெக்னலாஜியை பாஜக தமிழ்நாட்டில் திமுகவிற்கு எதிராக கையில் எடுத்துள்ளது.

உதாரணமாக இன்று ஆளும் திமுகவையும் - போதை பொருள் விவகாரத்தில் சாதிக் தேடப்படுவதையும் தொடர்புபடுத்தி மீம்ஸ் போட்டுள்ளனர். அதேபோல் மோடியை புகழும் வகையில் வித்தியாசமான டிரெண்டிங் வீடியோக்கள் என்று பாஜக அடித்து ஆடுகிறது.

அதிலும் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு சீன மொழியில் வாழ்த்து சொல்லும் போட்டோ, அடுத்த திமுக பொதுக்குழு பெய்ஜிங்லயாமே? உண்மையா? என்று கேட்பது , என்று பாஜக சமூக வலைத்தளங்களில் அடித்து ஆடிக்கொண்டு இருக்கிறது.

மஹால்;இந்த நிலையில்தான் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்குமான தேர்தல் தலைமையகத்தை சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் அமைத்துள்ளது தமிழக பாஜக. 39 தொகுதிகளிலிருந்து வரும் பிரச்சனைகளை தீர்க்க இந்த தலைமையகம் செயல்படும்.

அந்த மஹாலை தேர்தல் முடியும் வரை மொத்தமாக வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்த தலைமையகத்துக்கு கடந்த மாதம் சத்தமில்லாமல் கணபதி ஹோமத்தையும் நடத்தி முடித்திருக்கிறார்கள் தமிழக பாஜக தலைவர்கள். இந்த நிலையில், அமைந்தகரையில் உருவாக்கியிருக்கும் தேர்தல் தலைமையகத்தை தற்போது, தேர்தல் வார் ரூமாக பயன்படுத்த வேண்டும் என அண்ணாமலை உத்தரவிட்டுள்ளாராம். அதனால் வார் ரூமுக்கு தேவையான அனைத்து தொழில் நுட்ப வசதிகளும் தேர்தல் தலைமையகத்தில் நிறுவப்படவிருக்கின்றன.

குறிப்பாக, தேர்தல் களத்தில் திமுக, அதிமுக செய்யும் அலப்பறைகள், பணப்பட்டுவாடா, அதிகாரிகளை மிரட்டுதல், தேர்தல் பிரச்சாரத்தில் நடக்கும் திமுக, அதிமுகவுக்கு எதிரான கூத்துக்கள் என அனைத்தையும் உடனுக்குடன் சோசியல் மீடியாக்களில் பரப்பவும், சட்டரீதியாக எடுக்கப்பட்ட வேண்டிய விசயங்களில் உடனுக்குடன் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிடவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்த வார் ரூம் 24 மணி நேரமும் செயல்படத்தக்க வகையில் உருவாக்கப்படுகிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+