சல்லி சல்லியாக நொறுக்க பிளான்? விஜய்யின் பிம்பத்தை உடைக்க தேசிய பாஜக திட்டம்? இதுதான் அரசியல் கணக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள விஜய், வட மாநிலங்களிலும் பேசப்படும் அரசியல் தலைவராக மாறியிருக்கிறார்... சோஷியல் மீடியாவில் விஜய்க்கு ஆதரவாக வீடியோக்கள் பரவி வரும் நிலையில், இப்போது பாஜக வேறு ஒரு ரூட்டில் களமிறங்கியுள்ளது. இதற்கு பின்னால் இருப்பது வெறும் சட்டம் ஒழுங்கு விமர்சனம் மட்டும்தானா? அல்லது வேறு அரசியல் கணக்கும் உள்ளதா??

தவெக அரசை தமிழக பாஜக தொடர்ந்து விமர்சித்தபடியே உள்ளது.. சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில் தவெக அரசு தனது குறைந்தபட்ச திறமையையாவது நிரூபிக்க வேண்டும் என்றும், தேனி சம்பவம் அரசின் நிர்வாகத் தோல்விக்கு சான்றாக இருக்கும் என்றும் பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, நேற்றைய தினம் விமர்சித்திருந்தார்.

BJP Vijay Vijay Image BJP Strategy

தமிழக பாஜக

சென்னையில் பிரியாணி கடையில் பணம் தராமல் ஊழியர்களைத் தாக்கிய சம்பவம், அடையாறில் நடந்த கொலை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், குற்றவாளிகளுக்கு துணிச்சல் அதிகரித்துள்ளதாகவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தவெக அரசு தோல்வியடைந்துள்ளதாகவும் வெளிப்படையாகவே சாடினார்.

ஆவின் பால் பொருட்கள் உட்பட விலை உயர்வுகள் மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாகவும், ஆட்சி அமைந்து 6 மாதங்களிலேயே மக்கள் அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கிவிட்டதாகவும் வானதி சீனிவாசன் விமர்சித்தார்.

ஆனால், தவெக அரசு மீதான விமர்சனம், பாஜக தேசிய தலைமையிடமிருந்தும் வெடித்து கிளம்ப துவங்கி விட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக, தேசிய பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் நேற்று முன்தினம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வடமாநிலங்களில் விஜய்

காரணம், வட மாநிலங்களில், தமிழக முதல்வர் விஜய் மீதான பிம்பத்தை உடைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம்.. முதல்வராக விஜய் பதவியேற்றதில் இருந்து, அவரது தேர்தல் வெற்றி, தமிழகத்தைத் தாண்டி தென் மாநிலங்கள், வட மாநிலங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

வட மாநிலங்களில் தவெக அரசின் திட்டங்கள் குறித்து அதிகளவில் ரீல்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. "நாட்டில் யார் சிறந்த முதல்வர்?" எனக் கேட்டு, பலரும் விஜயின் பெயரைச் சொல்லும் வீடியோக்களும் பரவி வருகின்றன. இந்தச் சூழலில், வட மாநிலங்களில் விஜய்க்கு உருவாகும் ஆதரவை எதிர்கொள்ளவும், அவரது பிம்பத்தை உடைக்கவும் பாஜக தேசிய தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களை பாஜக விமர்சிப்பது வழக்கமான எதிர்க்கட்சி அரசியலாக தோன்றலாம். ஆனால், வட மாநிலங்களில் விஜய்க்கு கிடைக்கும் கவனத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது, இதற்குப் பின்னால் வேறு சில அரசியல் கணக்குகளும் இருப்பதாகவே தெரிகிறது.

பாஜக அரசியல் லாபம்?

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் நம்மிடம் சொல்லும்போது, "வட மாநிலங்களில் விஜய்யை சிறந்த முதல்வராக முன்னிறுத்தும் வீடியோக்கள் பரவி வருகின்றன. இதற்கு பதிலடியாக, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றை பாஜக கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் விஜய் ஆட்சியின் குறைகளை வட மாநில மக்களிடம் கொண்டு செல்ல முடியும்.

சினிமாவில் கிடைத்த புகழ் வேறு, ஆட்சியை நடத்துவது வேறு என்ற விமர்சனத்தையும் முன்வைக்க பாஜக திட்டமிடக்கூடும்... முக்கியமாக. விஜய் அரசுக்கு எதிரான முக்கிய எதிர்க்கட்சியாக தன்னை முன்னிறுத்தவும் பாஜக விரும்புகிறது. தவெக அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்க பாஜகவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அதுமட்டுமல்ல, வட மாநிலங்களில் விஜய்க்கு கிடைக்கும் புகழ் தொடர்ந்து அதிகரித்தால், அது தேசிய அளவில் அவரது அரசியல் செல்வாக்கையும் அதிகரிக்கலாம். எனவே, அவரது ஆட்சியின் குறைகளை முன்னிறுத்தி விஜய்யின் பிம்பத்தை எதிர்கொள்வதுடன், தமிழகத்தில் தனது அரசியல் இடத்தையும் வலுப்படுத்துவது, பாஜகவின் அரசியல் கணக்காக இருக்கலாம்" என்றெல்லாம் நம்மிடம் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+