அஜித் பவாரை வெளியேற்ற பாஜக திட்டம்! சரத்பவார் ரிட்டர்ன்ஸ்! RSS புதிய மூவ்.. தப்பித்த ஷிண்டே ?
சென்னை: அஜித் பவாரை தனது கூட்டணியிலிருந்து வெளியேற்ற பாஜக முயற்சி செய்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் அஜித் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்கள் சிலர் மீண்டும் தங்களின் பழைய தலைவர் சரத்பவார் அணிக்குத் தாவி வருகின்றனர்.
2024 மக்களவைத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்த மாநிலம் மகாராஷ்டிரா. அங்கே மாநிலக் கட்சியான உத்தவ் தாக்ரேவின் சிவசேனா மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து ஆட்சியைத் தக்கவைத்ததன் விளைவாகவே பாஜகவுக்கு இந்தத் தோல்வி சந்திக்க நேர்ந்ததாகப் பலரும் கருத்து கூறி இருந்தனர்.

இதனால் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் துணை முதல்வர் அஜித் பவாருக்கும் அரசியல் ரீதியாக ஒரு நெருக்கடி உண்டாகி இருக்கிறது. தேர்தல் வெற்றி மூலம் தொண்டர்கள் பலரும் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்பது சரத்பவார் தலைமையிலானது தான் என்பதை உறுதி செய்துள்ளனர். சிவசேனாவை பொறுத்தவரை உத்தவ் தாக்ரே தலைமைக்கே தொண்டர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் உள்ள மொத்தம் 48 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 13 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 9 இடங்களில் வென்றது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 8 இடங்களிலும் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா 9 இடங்களிலும் வென்றன. ஆளும் கட்சியான அஜித் பவாரின் தேசியவாத கங்கிரஸ் ஒரே தொகுதியில்தான் வெற்றி பெற்றது. மாறாக ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையிலான சிவசேனா 7 இடங்களில் வென்றது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவையும் அஜித்பவாரையும் கலக்கத்தில் ஆழ்த்தி இருந்தன. அதை உணர்ந்த ஷிண்டே விரைவில் வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் கணக்குகளை இப்போதே போடத் தொடங்கியுள்ளார். பாஜக மிகப்பெரிய தோல்வியை அடைந்ததால் கட்சியை சீரமைக்கும் முயற்சியைத் தேசிய தலைமை எடுத்து வருகிறது.
இந்நிலையில்தான் 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு, டிப்ளமோ அல்லது கல்லூரி படிப்பில் சேரும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் 'லட்லா பாய் யோஜனா' என்ற புதிய திட்டத்தை கடந்த புதன்கிழமை ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு மாநில அரசு அறிவித்தது. இதன் மூலம் இளம் வாக்காளர்களைக் கவர முடியும் என ஆளும் கட்சி ஒரு ஒரு மெகா ப்ளான் போட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
மேலும் 21 வயது முதல் 65 வயது வரையான தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் முக்யா மந்திரி மஜ்ஹி லட்கி பஹின் யோஜனா திட்டத்தினையும் அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காகக் கடந்த இரண்டு வாரங்களில் 44 லட்சம் ஆன்லைன் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளது. இதனை ஜூலை 1ஆம் தேதி அரசு அறிவித்தது. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 வரைதான் என அரசு கூறியுள்ளது. அக்டோபரில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது.
அதனை மனதில் கொண்டு ஷிண்டே அரசு தனது கடைசி பட்ஜெட்டில் இதனை அறிவித்தது. இதற்காக ஆண்டுக்கு ரூ.46,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மத்தியப்பிரதேச அரசின் லாட்லி பெஹ்னா யோஜனா அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாஜக மீண்டும் மபியில் ஆட்சியைத் தக்கவைக்க இந்தத் திட்டம் பெரிய அளவில் கைகொடுத்தது. ஆகவே, அதை அப்படியே மகாராஷ்டிராவில் கொண்டுவர ஷிண்டே முடிவு செய்துள்ளார்.
கடந்த வாரம் மகாராஷ்டிர மாநில மேல் சபைக்குத் தேர்தல் நடைபெற்றது. அதில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி போட்டியிட்ட 9 பேரும் வெற்றி பெற்றனர். மகா விகாஸ் அகாடி கூட்டணி தனது 3 இடங்களில் ஒன்றை இழந்துள்ளது. இது அக்கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் அஜித் பவாரும் தங்களின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அப்படியே வைத்துள்ளதை இந்த வெற்றி எடுத்துக் காட்டியுள்ளது.
ஆனால், இப்போது ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சில சலசலப்புகள் கேட்கத் தொடங்கியுள்ளன. பவார்கள் குடும்பத்தில் இதனால் குழப்பம் அதிகரித்துள்ளது. மராத்தி வார பத்திரிகையான விவேக் வெளியிட்டுள்ள செய்தியின் படி சரத்பவாருக்கு அஜித் பவார் செய்த துரோகம் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் மக்களை தள்ளியுள்ளது எனத் தெரிய வந்துள்ளது. மும்பை, கொங்கன், மேற்கு மகாராஷ்டிரா பகுதிகளில் பாஜகவின் தேர்தல் என்ன காரணம் என்று ஒரு ஆய்வை விவேக் நடத்தியது. அதில்தான் இந்தக் கருத்தை மக்கள் முன்வைத்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான போட்டி என்சிபி கட்சியின் அமைச்சர் சகன் புஜ்பால், சரத்பவாரை சந்தித்தார். இவர் அஜித் பவாரின் கோஷ்டியைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தச் சந்திப்புக்குப் பின்னர் கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இப்போது அஜித் பவார் தலைமையிலான என்சிபியிலிருந்து பல தலைவர்கள் சரத் பவார் கட்சியில் இணைந்துள்ளனர். இதில் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதி தலைவர் அஜித் கவானே சரத்தும் இணைந்துள்ளார். இதற்கு முன், இதே பகுதியைச் சேர்ந்த மூன்று மூத்த தலைவர்கள் கடந்த செவ்வாய் அன்று அஜித் பவார் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில்தான் அஜித் பவாரின் என்சிபி மறுபடியும் சரத்பவாருடன் இணைய உள்ளதாக ஊகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன. அஜித் பவார் மீண்டு கட்சியில் இணைவது குறித்த சர்ச்சைக்கு இதுவரை சரத்பவார் ஒரு எதிர்ப்பும் சொல்லவில்லை. துரோகம் செய்த அஜித் பவாரை மீண்டும் கட்சியில் இணைக்கப்படுவாரா? அண்ணன் மகனை மன்னித்து ஏற்றுக் கொள்வீர்களா? என்ற கேள்வி சரத்பவார் முன்வைக்கப்பட்டபோது, அதற்கு அவர், 'இது குறித்து முடிவு எடுப்பதற்கு முன்பு என்னுடன் நின்ற கட்சி நிர்வாகிகளைக் கலந்தாலோசித்த பின்னரே முடிவை எடுப்பேன்’ என்று கூறியுள்ளார்.
இதனால் அஜித்பவாரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இவர் மகாயுதி கூட்டணியில் நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தனது கட்சியின் மூத்த தலைவர் பிரபுல்படேலுக்கு மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அஜித் கோரிக்கை வைத்தார். அதை பாஜக புறக்கணித்தது. அவருக்கு முன்பாக உள்ள அடுத்த வாய்ப்பு சட்டமன்றத் தேர்தல்தான். அது இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. அதில் இழந்ததை மீண்டும் அஜித்பவார் பெற வேண்டும். இல்லை என்றால், அவரது அரசியல் வாழ்க்கை சூனியமாகிவிடும்.
மக்கள் அவருக்கு எதிராக உள்ளனர். ஆனால், அஜித் பவார் மீண்டும் சரத்பவாருடன் இணைவதை பாஜக விரும்பவில்லை. அதே நேரத்தில் அஜித் பவாருடன் பாஜக கூட்டணி அமைத்ததை ஆர்.எஸ்.எஸ் விரும்பவில்லை. இந்த அமைப்பின் ஆதரவு பத்திரிகைகள் இக்கூட்டணியை எதிர்த்து எழுதி வருகின்றன. விவேக் வார இதழ் கூட பாஜக அஜித் பவாரை கழற்றிவிட விரும்புவதாகச் சொல்கிறது. அந்த விலகல் பாஜகவைக் காப்பாற்றும் என்றும் அது கூறியுள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications