சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆட்டம் ஆரம்பம்.. பாஜக கொடுத்த தொகுதி பட்டியல்.. அதிர்ச்சியடைந்த அதிமுக தலைவர்கள்?

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் திமுக..யோசனையில் அதிமுக- வீடியோ

    சென்னை: 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை தமிழகத்தில் உள்ள திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சந்திக்க தயாராகி வருகின்றன. கருணாநிதி சிலை திறப்பு அதற்கு அச்சாரமாகி விட, சமீப கால தமிழக அரசியல் நடவடிக்கைகள் அதிமுகவை கொஞ்சம் திணறடித்திருக்கிறது. அதனை சற்று விரிவாக பார்ப்போம்...

    2014ம் ஆண்டு மத்தியில் பொறுப்பேற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசு 5ம் ஆண்டின் இறுதியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. 5 மாநில தேர்தல் கொடுத்த சறுக்கலில் படுகாயமடைந்த பாஜக கவனமாக தமது தேர்தல் பிரச்சாரத்தை ரேபரேலி தொகுதியில் இருந்து பிரதமர் மோடியின் பிரச்சாரத்துடன் தொடங்கி உள்ளது.

    தென் மாநிலத்தின் முக்கிய அரசியல் பெட்டகமான தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்றி, தாமரையை மலர வைத்துவிடுவது என்று பாஜக பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது.

     2 ஆண்டுகளாக தொடக்கம்

    2 ஆண்டுகளாக தொடக்கம்

    ஆனால் தமிழகத்தில் திராவிட அரசியல் நீக்கமற நிறைந்திருப்பதால் முதல்ல... திண்ணையை பிடிப்போம்.... அப்புறம் வீட்டுக்குள்ள போவோம் என்ற வசனத்தின்படி காய் நகர்த்தி வருகிறது. அதற்கு அச்சாரமாக ஜெயலலிதா மறைவு என்ற திண்ணை வகையாக பாஜகவுக்கு கிடைக்க.. அதில் உட்கார்ந்து கொண்டு தாமரையை மலர வைக்கும் வேலைகளை தொடங்கி 2 ஆண்டுகளாக தொடங்கி நடத்தி வருகிறது.

     குட்கா ஊழலும்

    குட்கா ஊழலும்

    ஜெயலலிதா மறைவு, விசாரணை ஆணையம் என ஆளும் அதிமுக ஒரு பக்கம் தாமாக திணற, கொஞ்ச காலம் அனைவரும் மறந்திருந்த குட்கா ஊழல் முறை கேடு, சிபிஐ விசாரணை என்று மறுபக்கம் அரசியல் சதுரங்கம் மீண்டும் அரங்கேற்ற தொடங்கி இருக்கிறது பாஜக. 5 மாநில பாஜக தேர்தல் தோல்வி குறித்து தமிழக முக்கிய அமைச்சர்கள், பேட்டி தரும் விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

     தடுமாறிய பாஜக

    தடுமாறிய பாஜக

    பிரதமர் மோடி அரசுக்கு மக்கள் அளித்த மார்க் என்று தமிழகத்தில் பிரச்சார பீரங்கியை அதிமுக ஸ்டார்ட் செய்ய தடை போட முடிவெடுத்தது பாஜக. மேலும் தேர்தல் தோல்வியால் உட்கட்சி அரசியலில் குழப்பம், பிரதமரின் அணுகு முறையை மாற்றுங்கள் என்ற கூக்குரல் பாஜகவை சற்றே தடுமாற வைத்துள்ளது.

     இறுகும் குட்கா விசாரணை

    இறுகும் குட்கா விசாரணை

    அதை சமாளிப்பதற்குள் விழி பிதுங்கிய பாஜகவை 5 மாநில தேர்தல் குறித்து அதிமுக கையாண்ட விதம் பாஜகவுக்கு எரிச்சலை கிளப்ப ... அதன் தொடர்ச்சி தான் குட்கா விசாரணையும், அதனால் இறுகத் தொடங்கியிருக்கும் பிடியும் என்கின்றனர் தமிழக அரசியலை உற்று நோக்குபவர்கள்.

     விளக்கமளித்த அமைச்சர்

    விளக்கமளித்த அமைச்சர்

    முன்பை விட விசாரணை இப்போது முறுக்கேற,கொஞ்சம் திணறித்தான் போனது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பு. அதன் தொடர்ச்சியாக... முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்து பேசியுள்ளார் என்று கூறுகிறார்கள்.

     கூக்குரல் இடும் எதிர்க்கட்சிகள்

    கூக்குரல் இடும் எதிர்க்கட்சிகள்

    முக்கிய அமைச்சரான அவரை லைம்லைட்டில் வைத்துக் கொண்டே விசாரணையை இறுக்கிப் பிடிக்க தொடங்கியுள்ளது பாஜக என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அதிமுக அரசை உடனடியாக கலைக்க வேண்டும் என்று தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன.

     தேர்தல் பேர கணக்கு

    தேர்தல் பேர கணக்கு

    சொந்த கட்சி அரசியல் நெருக்கடி,(அதிமுக,அமமுக இணைய வேண்டும் என்ற பாஜகவின் அசைன்மெண்ட்) மத்திய அரசின் ரெய்டு தாக்குதல்கள், விசாரணைகள் என திக்கித் திணறித்தான் போயிருக்கிறது ஆளும் அதிமுக. அதற்குள் மற்றொரு பேரிடியாக பாஜக கூறியுள்ள தேர்தல் பேர கணக்கு ... தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக்கே அது தான் என்று தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதிமுகவை கொஞ்சம் உசுப்பேற்றி உள்ளதோடு.. கொஞ்சம் கொந்தளிக்க வைத்துள்ளதாம் இந்த பட்டியல். தற்போதுள்ள தொகுதிகளில் 20 தொகுதிகள் வரை பாஜக கேட்டுள்ளதாக தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

     பாஜக கட்டளை??

    பாஜக கட்டளை??

    20 தொகுதிகளின் பெயர்களை பார்த்தால் அனைத்தும் கட்சியின் முக்கிய தலைகள் அடங்கிய தொகுதிகளும் அதில் அடங்கியிருக்கிறதாம். அது தவிர, அதில் 15 தொகுதிகள் வரை நிச்சயம் கொடுக்க வேண்டும் என்றும் கட்டளை இட்டிருக்கிறதாம் பாஜக.

     அதிர்ந்த அதிமுக தலைமை??

    அதிர்ந்த அதிமுக தலைமை??

    அந்த லிஸ்டில் உள்ள தொகுதிகளை பார்த்து அரண்ட அதிமுக, என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அந்த தொகுதிகளில் போட்டியிட்டு தற்போது எம்பியாக உள்ளவர்களை எப்படி எதிர்கொள்வது, கிட்டத் தட்ட அந்த 20 எம்பி தொகுதிகளில் அடங்கியிருக்கும் 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், தொண்டர்கள் உள்ளிட்டோருக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் அதிமுக தலைமை அதிர்ந்து போயுள்ளது.

     தொடங்கிய திமுக

    தொடங்கிய திமுக

    திமுக தமது லோக்சபா தேர்தல் கணக்கை கருணாநிதியின் சிலை திறப்பு விழா, எதிர்க்கட்சித் தலைவர்களின் அணிவகுப்பு, விழா மேடையில் வீர வாளுடன் கைகளை உயர்த்தி காட்டியது, புதிய முதலமைச்சர்களின் பதவியேற்பு விழா என்று ஜம்மென்று தொடங்கியிருக்கிறது.
    ஆனால்.... அதிமுகவோ பட்டியலை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கையில் இரட்டை இலையா... அல்லது மற்றொரு கையில் தாமரையா... எதை வைத்துக் கொள்வது என்று தெரியாமல் தடுமாறி வருகிறது.

     அதிமுகவுக்கு எளிதல்ல!!

    அதிமுகவுக்கு எளிதல்ல!!

    சிறையில் உள்ள சசிகலா 2019ம் ஆண்டு ஜனவரியில் விடுதலையாவார் என்று அமமுக வேறு ஒரு பக்கம் தகவல்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்க... ஆக மொத்தம்... 2019 லோக்சபா தேர்தல் யாருக்கு எளிதானதாக தோன்றுகிறதோ... இல்லையோ... அதிமுகவுக்கு சத்தியமாக இல்லை என்று சொல்லி விடலாம்...
    எப்படி என்கிறீர்களா...?? கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்... என்று சினிமா வசனத்தை மேற்கோள் காட்டுகின்றனர் அரசியல் திறனாய்வார்கள்.

    English summary
    The BJP preparing to contest in Tamilnadu for 2019 Lok Sabha election and hander over a list to ADMK for seat sharing, sources said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X