இதே சூட்டோடு தமிழகத்திலும் பாஜக ஆட்சி வரப்போகுது! அடுத்த 2 வருடத்தில் கூட நடக்கலாம்: அண்ணாமலை பேட்டி
சென்னை: தமிழகத்திலும் பாஜக ஆட்சி ஏற்படும். அது 2024 ஆம் ஆண்டிலா அல்லது 2026 ஆம் ஆண்டிலா என்பது தெரியவில்லை என பாஜக தலைவர் கே அண்ணாமலை தெரிவித்தார்.
Recommended Video
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உ.பி.க்கு 7 கட்டங்களாகவும், கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும், மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.
இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியும் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியும் நடைபெற்று வருகிறது. உ.பி. மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்த நிலையிலும் உ.பி தேர்தல் வெற்றி பாஜகவுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக கொண்டாட்டம்
இதையடுத்து பாஜகவினர் நாடு முழுவதும் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் கமலாலயத்திலும் பாஜகவின் வெற்றி கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, கரு நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

4 மாநிலங்களில் பாஜக ஆட்சி
அப்போது செய்தியாளர்களை சந்தித்த கே அண்ணாமலை கூறுகையில் 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் நிச்சயம் பாஜக ஆட்சி அமையும். இதே போல் ஒரு நாள் தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமையும். அது ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலும் நடத்தப்படுமா இல்லை 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்தப்படுமா என தெரியவில்லை.

ஏட்டிக்கு போட்டியான திமுக
எதற்கெடுத்தாலும் திமுக ஏட்டிக்கு போட்டியாக செய்து வருவது தமிழக மக்களுக்கு ஏற்றதல்ல. தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்று சக்தி யாரும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. பாஜகவின் உழைப்பிற்கு தொடர்ந்து ஊதியம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. பாஜகவின் வளர்ச்சி அரசியலுக்கு மக்கள் மிகப் பெரிய அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள்.

பெட்ரோல் டீசல் விலை உயருமா
கொரோனா கட்டுப்பாடுகளை திறம்பட செய்ததால்தான் உத்தரப்பிரதேசத்தில் மக்கள் வெற்றி வாரி கொடுத்துள்ளார்கள். பெட்ரோல் டீசல் விலை உயருமா உயராதா என்பதை சொல்ல நான் வல்லுநர் கிடையாது என்றார். 5 மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படவில்லை என சொல்லப்பட்டு வந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை இவ்வாறு ஒரு பதிலை அளித்துள்ளார்.
-
Annamalai Delhi Trip LIVE: தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! பாஜக தேசிய தலைவருடன் சந்திப்பு! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!










Click it and Unblock the Notifications