கார்த்தி சிதம்பரம்-அண்ணாமலை திடீர் செல்பி.. எதிரெதிர் துருவங்கள் சந்தித்ததன் பின்னணி தெரியுமா?
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்பியுமான கார்த்தி சிதம்பரம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் திடீரென்று சேர்ந்து எடுத்த செல்பி போட்டோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய அரசியல் முதல் மாநில அரசியல் வரை எதிரெதிர் கட்சியாக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் சில வேளைகளில் கட்சி பாகுபாட்டை மறந்து இருகட்சி தலைவர்களும் சந்தித்து கொள்ளும் நிகழ்வுகள் நடக்கும்.
குறிப்பாக அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் இரு கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து கொள்ளும் படங்கள் வெளியாகி இணையதளத்தில் விவாதத்துக்கு உள்ளாகும்.

அண்ணாமலை-கார்த்தி சிதம்பரம் செல்பி
அந்த வகையில் தான் தற்போது இணையதளத்தில் ஒரு படம் வெளியாகி உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியின் எம்பியான கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சேர்ந்து எடுத்து கொண்ட செல்பி போட்டோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செல்போனில் செல்பி எடுக்க கார்த்தி சிதம்பரம் எம்பி, திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு ஆகியோர் போட்டோவில் உள்ளனர்.

வெளியானது எப்படி?
இந்த போட்டோவை திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‛‛இருதுருவங்களுடன் கோவை விமான பயணம்'' என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் தான் அண்ணாமலை-கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சந்தித்து செல்பி எடுத்த படம் வெளியாகி உள்ளது.

கார்த்தி சிதம்பரம் பதில்
இந்த போட்டோவுக்கு கார்த்தி சிதம்பரம் டுவிட்டர் மூலமாக பதிலளித்துள்ளார். அதில், ‛‛பிரபு நீங்கள் ட்ரோலுக்கு தயாராகிவிட்டீர்கள். பிரபு என்பவர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தான். எனவே பிற யோசனைகள் செய்ய வேண்டாம்'' என கூறியுள்ளார். இந்த படத்துக்கு தற்போது பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

பதிலின் உள்அர்த்தம்
தற்போதைய சூழலில் காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி பாஜகவில் இணைந்து வருகின்றனர். அந்த அடிப்படையில் இதுபற்றியும் சிலர் சிந்தித்து கருத்து தெரிவிக்க வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கும் நோக்கத்தில் தான் கார்த்தி சிதம்பரம் ‛வேறு யோசனைகள் வேண்டாம்' என குறிப்பிட்டுள்ளார்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications