இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இ-பாஸ் கிடையாது... தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்க -எல்.முருகன்
சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலும் இ-பாஸ் முறை கிடையாது என்றும், மக்கள் படும் சிரமத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு அதனை நீக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இ-பாஸ் முறைக்கு எதிராக மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்ப்பும், கோபமும் வலுத்து வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் இ-பாஸ் இனித் தேவையில்லை எனக் கூறி வருகின்றனர்.

எல்.முருகன் அறிக்கை
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் உள்ள நிலையில் பணி நிமித்தமாக மற்ற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் இ-பாஸ் கிடைக்காமல் அவர்கள் அவதியுறுவதாகவும் கூறியுள்ளார். மிக மிக அவசியமான தேவைகளுக்கு கூட பலருக்கும் இ-பாஸ் கிடைப்பதில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.

போலி இ-பாஸ்
மேலும், ஒரு சிலர் குறுக்கு வழியில் ஊழல் செய்து இ-பாஸ் வழங்க முயற்சிப்பதும், போலி இ-பாஸ் தயாரித்து வழங்குவதும் ஆங்காங்கே நடைபெறுவதாகவும் எல்.முருகன் புகார் தெரிவித்துள்ளார். இ-பாஸ் நடைமுறையில் உள்ளதால் கணவன் மனைவி சந்திக்க முடியாத நிலை, பெற்றோர் பிள்ளைகள் சந்திக்க முடியாத நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

செய்தி வருகிறது
இ-பாஸ் நடைமுறையால் மக்களின் மனக்குமுறல்கள் தொடர்ந்து செய்தியாக வந்த வண்ணம் உள்ளது என்றும், மக்கள் படும் சிரமத்தை கருத்தில் கொண்டு இ-பாஸ் முறையை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்தியாவில் மற்ற எந்த மாநிலங்களிலும் இ-பாஸ் கிடையாது என அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசுக்கு கோரிக்கை
இதுவரை எதிர்க்கட்சிகள் மட்டுமே அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவரான எல்.முருகனே தமிழக அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications