எதிர்க்கட்சிகள் ஒரு பிளான் போட.. முந்திக்கொண்ட அண்ணாமலை! எம்.பிக்களை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!
சென்னை: நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை போராட்டங்கள் நடைபெறும் நிலையில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை அவமதித்த இந்தியா கூட்டணி கட்சியினரை கண்டித்து தமிழக பாஜக இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
நாடாளுமன்றத்தில் கலர் புகை குண்டுகளோடு இரண்டு பேர் உள்ளே புகுந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரிய விளக்கம் கேட்டு அமளியில் ஈடுபட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் சுமார் 150 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே சமயத்தில் இவ்வளவு எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்தியபோது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி கல்யாண் பானர்ஜி துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் போல் மிமிக்ரி செய்து காட்டினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரத்தை கண்டித்து இந்தியா கூட்டணி டிசம்பர் 22ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக பாஜக சார்பாக போட்டி போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதாவது, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை அவமதித்த இந்தியா கூட்டணி கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், எதிர்கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த சில நாட்களாக. பாராளுமன்ற மரபுகளை மீறியும், பொது மக்களுக்கு தாங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கடமையை மறந்தும், அரசியல் சாசன பதவியில் உள்ளவர்களிடம் அவமரியாதையாக நடந்து வந்ததையும் நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். இந்த தவறான நடத்தையை இன்னும் அவர்கள் தொடர்ந்து கொண்டிருப்பது பாராளுமன்றத்திற்கு மட்டுமன்றி மக்கள் மன்றத்திற்கும் அவமானமாகும்.
மரியாதைக்குரிய துணை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் அவர்களை தூற்றியும், அவமரியாதையும் செய்த ராகுல் காந்தி மற்றும் அவருக்கு துணை நின்ற இதர எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து வியாழக்கிழமை அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும். அரசியல் சாசன அமைப்புகள் இயங்க முடியாமல் முடக்கியவர்களுக்கு எதிராக நமது கண்டன குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் இன்று தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இன்று மாலை 4 மணியளவில் பல்வேறு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அப்போது, இந்தியா கூட்டணி கட்சியினரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்புகின்றனர். நாளை எதிர்க்கட்சிகளின் போராட்டம் நடைபெற உள்ள நிலையில், முந்திக் கொண்டுள்ளது தமிழக பாஜக.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications