சொத்துவரி உயர்வு சாதாரண விஷயமல்ல! தேவையில்லா வேலை! சென்னை ஆர்ப்பாட்டத்தில் கொதித்த பாஜக எம்எல்ஏக்கள்
சென்னை: தமிழகத்தில் 150% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதை சாதாரண விஷயமாக கடந்து செல்ல முடியாது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சொத்துவரி உயர்வை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
ஏற்கனவே கொரோனாவால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் இப்போது தான் அதிலிருந்து மீண்டு வரும் நிலையில் சொத்து வரி உயர்வு தேவையற்ற ஒன்று எனக் கூறியிருக்கிறார்.

சொத்து வரி உயர்வு
தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி ஆகியோர் உட்பட அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

நயினார் நாகேந்திரன்
அப்போது பேசிய பாஜக மாநில துணைத் தலைவரும் பாஜக சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் 150% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பது சாதாரண விஷயமல்ல எனக் கூறினார். சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி பாஜக வெளிநடப்பு செய்தும் திமுக அரசு இந்த விவகாரத்தில் மறுபரிசீலனை செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.

மக்களுக்கு பாதிப்பு
மேலும், ஏற்கனவே கொரோனாவால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் இப்போது தான் அதிலிருந்து மீண்டு வரும் நிலையில் சொத்து வரி உயர்வு தேவையற்ற ஒன்று எனக் கூறினார். மத்திய அரசு சொல்லித்தான் சொத்து வரியை உயர்த்தியதாக தமிழக அரசு தவறான தகவலை பரப்பி வருவதாகவும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு மத்திய அரசு 24% அதிக நிதியை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மக்கள் நலன்
பொதுமக்கள் நலன் கருதி சொத்துவரி உயர்வை முதலமைச்சர் ஸ்டாலின் வாபஸ் பெற வேண்டும் என்றும் மக்கள் அரசு என்று கூறிக்கொண்டு மக்களின் பிரச்சனைகளை தீர்க்காத அரசாக இருந்து வருவதாகவும் பாஜக ஆர்ப்பாட்ட மேடையில் விமர்சிக்கப்பட்டது.
-
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications