Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“அரைகுறை ஆடை நடனத்தை ரசித்த பெரியகருப்பன்! சுயமரியாதை குறித்து பேச தகுதியிருக்கிறதா?” பாஜக கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில், பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆடியதை அமைச்சர் கைதட்டி ரசித்தார் என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் இப்பேர்ப்பட்ட தலைவர்கள் சுயமரியாதை குறித்து பேச தகுதி இருக்கிறதா என்று பாஜக கேள்வி எழுப்பியிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலினின் 49வது பிறந்தநாள் விழா மாநிலம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்திலும், பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், பெண் நடன கலைஞர்கள் அரைகுறை ஆடையுடன் நடனமாட வைக்கப்பட்டனர். இதனை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ரசித்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

BJP DMK Tamil Nadu

இந்நிலையில் இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்திருக்கிறது. "கேளிக்கைகளில் மட்டுமே மூழ்கி களிப்புறுவதற்கு அரசுப் பதவி எதற்கு? எவ்வித தகுதியும் இன்றி வாரிசு அடிப்படையில் மட்டுமே இன்று துணை முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவரின் பிறந்த நாளை மூத்த அமைச்சர்கள் கொண்டாடுவது என்பதே அடிமைத்தனத்தின் உச்சம்.

இதில் அந்த விழாவை ஆபாச விழாவாக மாற்றி சிலாகித்துக் கொள்வது எத்தனை பெரிய கேவலம்? இப்படிப்பட்டவர்களுக்கு சுயமரியாதை குறித்தோ பகுத்தறிவு பற்றியோ பேசுவதற்குத் துளியாவது தகுதியிருக்கிறதா?

அதிலும் அரைகுறை ஆடையுடன் பெண்களை அருகில் அழைத்து நடனமாட வைத்து கைதட்டி ரசிக்கும் திமுக தலைவர்களை நம்பி, தமிழகப் பெண்கள் எப்படி தங்கள் குறைகளைக் கூறுவார்கள்? சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சுகாதாரக் குறைபாடு, ஊழல் முறைகேடு எனத் தமிழகத்தின் அரசு இயந்திரமே பழுதடைந்து கிடக்கையில் முதல்வர் முதல் மூத்த அமைச்சர்கள் வரை அனைவரும் இப்படி கேளிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருப்பது வெட்கக்கேடு.

அதுசரி ஆடின கால்கள் அடங்குமா? காலங்காலமாக உடல்சார் அரசியலை மட்டுமே முன்னெடுத்து வரும் திமுகவினரிடம் நாகரிக நிர்வாகத்தினை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?" என்று தமிழக பாஜக x தளத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+