டி.ஆர். பாலு சொன்னது போல் எல்.முருகனே Unfitதான்.. சொன்னது யார்னு பாருங்க! அதிர்ச்சியா இருக்கே!
சென்னை: திமுக எம்பி டி.ஆர்.பாலு மத்திய அமைச்சர் எல். முருகனை மிகவும் கொச்சையாக பேசியதற்கு உண்மையில் நான் கோபம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக பொதுச்செயலாளர் இராம ஶ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மத்திய அமைச்சர் எல்.முருகனை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மிகவும் கொச்சையாக பேசி அவமானப்படுத்த முயற்சித்திருக்கிறார். 'Unfit' என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். உண்மையில் நாம் இதற்கு கோபம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எல்.முருகனே கூட Unfit அமைச்சர்தான்.

கோபாலபுரத்து சீமான்களின் வாரிசாக வந்தவர் இல்லை முருகன் எனவே அவர் Unfit தான். இத்தனை ஆண்டுகள் பட்டியல் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தும் மத்தியில் அமைச்சராக இருந்தும் முறையற்ற வழியில் கோடி கோடியாய் பணம் சேர்க்கவில்லை எனவே Unfit தான். சினிமாவில் நடித்து புகழ் சேர்க்கவில்லை எனவே Unfit தான்.
என்னை புதைத்த இடத்தில் கோபாலபுரத்து அடிமை அங்கே சமாதியில் இருக்கிறான் என்று சொல்லுங்கள் என்று மூத்த திமுக தலைவர்களே சொல்வது போல கொத்தடிமை சாசனம் எழுதவில்லை அவர். எனவே அவர் Unfit தான். திருட்டு ரயில் ஏறி அரசியலுக்கு வந்தவர் அல்ல அவர், எனவே Unfit தான். ஒன்று இரண்டு மூன்று என்று வாழ்க்கைத் துணை நலன்களை வரிசைப்படுத்திக் கொண்டவர் அல்ல அவர். எனவே அவர் Unfit தான். ஒரு செருப்பு தைப்பவரின் பேரன் உலகத்தின் மிகப் பெரும் ஜனநாயகத்தில் மத்திய அமைச்சராக இருக்கிறார் என்பதையும், அப்படிச் செய்தவர் நரேந்திர மோடி என்பதையும் இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இவர்களின் ஜனநாயகப் பண்பே இவ்வளவுதான்.
ஏன் இவ்வளவு கோபம் முன்னாள் அமைச்சரே?. முரசொலி அறக்கட்டளைக்கு பஞ்சமி விவகாரத்தில் முருகன் சம்மன் அனுப்பினாரே என்ற கோபமா. வேல் யாத்திரை நடத்தி உங்களது இந்து விரோத போக்கை தோலுரித்தாரே என்ற கோபமா. சாமானிய ஒருவன் கோபாலபுரத்து சீமான்களுக்கு சமமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறானே என்று கோபமா? 'Fitness Challenge' க்கு நாங்கள் தயார் அமைச்சரே நீங்கள் தயாரா??? அடுத்த நாடாளுமன்றத்திலும் எல்.முருகன் அமைச்சராக தொடர்வார். அடுத்த நாடாளுமன்றத்தில் உங்களுக்கு அமர இடம் இருக்குமா அந்த 'Fitness' உங்களுக்கு இருக்குமா அமைச்சரே?" என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு










Click it and Unblock the Notifications