திருச்சியில் பாஜகவுக்கு டெபாசிட் கிடைக்காது.. ஆரூடம் சொன்ன சூர்யா சிவாவுக்கு ராம.சீனிவாசன் பதிலடி
சென்னை: அரசியல் பணியாற்றுவோர் மண்ணின் மைந்தனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர் திருச்சி சூர்யா சிவாவுக்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அரசியல் பணியாற்றுவோர் மண்ணின் மைந்தனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த மண்ணுக்கான மைந்தனாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். நான் மண்ணுக்கான மைந்தன் என திருச்சி சூர்யா சிவாவின் பெயரை குறிப்பிடாமல் ராம சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

திருச்சி நாடாளுமன்ற வேட்பாளராக ராம சீனிவாசனை களமிறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும் என திருச்சி சூர்யா சிவா விமர்சனத்திற்கு ராம சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து திருச்சி சூர்யா சிவா தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ராம சீனிவாசனை திருச்சியில் களமிறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும்.
வெற்றியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மாறாக மண்ணின் மைந்தரை களமிறக்கினால் திருச்சியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு திருச்சி சூர்யா சிவா தெரிவித்திருந்தார்.

யார் இந்த திருச்சி சூர்யா: திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன். இவருக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் திருச்சி சூர்யா ஐக்கியமானார். இதையடுத்து 2023 ஆம் ஆண்டு தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியுடன் சூர்யா சிவா தொலைபேசியில் உரையாடிய பேச்சு லீக்கானது.
அதில் டெய்சியை சூர்யா சிவா ஆபாசமாகவும் முக்கிய நிர்வாகிகளை அவருடன் தொடர்புப்படுத்தியும் மிகவும் கொச்சையான வார்த்தைகளால் பேசியிருந்தார். அப்போது இருவரும் வாக்குவாதம் செய்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென இருவரும் சமாதானம் ஆனார்கள்.

இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யா சிவா 6 மாதங்களுக்கு பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார். இருந்தாலும் பாஜகவில் நடக்கும் உள்கட்சி விவகாரங்களை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து திருச்சி சூர்யா சிவா 6 மாதங்கள் கழித்து மீண்டும் இணைந்தார்.
யார் இந்த ராம சீனிவாசன்: பாஜகவின் ராம சீனிவாசன் மதுரையை சேர்ந்தவர். இவர் நபார்டு வங்கியின் தனி இயக்குநராகவும் இருந்து வருகிறார். மதுரையை சேர்ந்த ராம சீனிவாசன் திருச்சியில் போட்டியிட்டால் எப்படி வெல்வார் என்ற கேள்வியை சூர்யா சிவா எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications