அதிமுக விலகியதில் அதிர்ச்சி இல்லை, மகிழ்ச்சிதான்! அடுத்து பாஜக ராம ஸ்ரீநிவாசன் சொன்ன முக்கிய மேட்டர்
சென்னை: பாஜக உடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இந்த முடிவால் தாங்கள் அதிர்ச்சி அடையவில்லை என்றும் மகிழ்ச்சியே அடைவதாகவும் பாஜக ராம ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு அதிமுக உடன் பாஜக கூட்டணியில் இல்லை என்ற அறிவிப்பு வெளியானது.

அதிமுக தலைவர்கள் டெல்லி சென்று திரும்பிய பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளதால் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பாஜக ராம ஸ்ரீநிவாசன் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி இல்லை: இது குறித்து டிவி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "அதிமுகவின் இந்த முடிவு அதிர்ச்சி எல்லாம் ஏற்படுத்தவில்லை. அவர்கள் கூட்டணியில் தொடர வேண்டும் என முடிவெடுத்திருந்தால் அது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இருப்பினும், அவர்கள் சில காரணங்களை சொல்லி கூட்டணியில் இருந்து விலகியுள்ளனர். எங்கள் எதிரி திமுக தான். எனவே, எங்கள் நட்பு கட்சி வெளியே சென்று வருத்தமாக இருந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதுதான் அரசியல் எதார்த்தம்.
இருப்பினும், நாங்கள் களத்தில் திமுகவைச் சந்திப்போம். திமுகவைத் தோற்கடிப்போம். ஏற்கனவே கடந்த 2014இல் திமுக, அதிமுக இல்லாமல் ஒரு கூட்டணியை உருவாக்கிய அனுபவம் எங்களுக்கு இருக்கிறது. அப்போது திமுக ஒரு இடத்திலும் வெல்லாத நிலையில், நாங்கள் இரண்டு இடங்களில் வென்றோம். இந்த முடிவால் எங்கள் தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள்.
மகிழ்ச்சி தான்: அதிமுக- பாஜக கூட்டணி இல்லை என்பதில் திமுக குளிர்காய வேண்டாம். நிச்சயம் பாஜக வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும். மிகப் பெரியளவில் வெல்லவே செய்யும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த முடிவால் சொல்லப்போனால் நாங்கள் மகிழ்ச்சி தான் அடைகிறோம். அதேநேரம் பொது எதிரான திமுகவை பாஜகவும் அதிமுகவும் இணைந்து எதிர்கொள்ளாமல் போனதில் சிறிய வருத்தம் இருக்கவே செய்கிறது.
நீண்ட காலமாக எங்களுடன் கூட்டணியில் இருந்த அதிமுக இப்போது விலகியுள்ளதால் சற்று வருத்தம் தான். அதேநேரம் திமுகவை எதிர்த்துக் களமாடுவதில் எந்தவொரு தயக்கமும் இல்லை. இப்போது தமிழ்நாட்டின் அரசின் களம் இரு முனை போட்டியில் இருந்து மும்முனை போட்டியாக மாறுகிறது. இதனால் பாஜகவுக்கு அரசியல் ரீதியாக நல்லதுதான்.
எதிரி திமுகதான்: எங்கள் எதிரி திமுக என்பதில் சமரசம் செய்ய மாட்டோம். சித்தாந்த ரீதியாக நாங்கள் அவர்களைத் தான் எதிர்க்கிறோம். மக்களுக்கு எதிரி திமுக என்பதில் எங்களுக்கு எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதிமுக எங்கள் கூட்டணியில் இருந்து விலகியுள்ளது துரதிர்ஷ்டவசமானது என்று சொல்லலாம் அவ்வளவுதான். அதேநேரம் இனிமேல் அதிமுகவை பாதுகாக்கும் வகையில் பேசுவதிலும் பயனில்லை.
எங்களால் தனித்து திமுகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேர்தல் களமும் அப்படிதான் இருக்கிறது. அண்ணாமலை பாஜக தலைவராக வந்த பிறகு நல்ல எழுச்சி கிடைத்துள்ளது. பல தொகுதிகளில் எங்களால் திமுகவைத் தனித்தே எதிர்கொள்ள முடியும்.
அதிமுகவும் காரணம்: அண்ணாமலை பேச்சு குறித்து அதிமுக கடந்த ஓராண்டாகப் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். பொதுவெளியில் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் கூட பேசுகிறார்கள். அதெல்லாம் தேவையற்றது தான். அவர்கள் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள். இதனால் கூட்டணி முறிந்ததற்கு பாஜக மட்டுமே காரணம் எனச் சொல்ல முடியாது. அதிமுக தலைவர்களும் இதற்கு ஒரு காரணம்தான்.
இருந்தாலும், எல்லாவற்றையும் தாண்டி நாட்டின் நலனை முதன்மையாக வைத்துப் பார்க்கும் போது, திமுகதான் எங்கள் எதிரி என்பதில் தெளிவாக இருக்கிறோம். எங்களை விட்டு விலகிச் சென்றாலும் அதிமுக எங்கள் எதிரி இல்லை. அதேநேரம் அதிமுக இல்லாமல் திமுகவை எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கையும் எங்களிடம் இருக்கிறது.
தனித்துப் போட்டியிடுவோம்: எந்த கட்டத்திலும் பாஜக தொண்டர்கள் சோர்ந்து போக மாட்டார்கள். அதிமுகவுடன் கூட்டணி வேண்டும் என்பவர்களும் சரி வேண்டாம் எனச் சொல்லும் தொண்டர்களும் பலர் பாஜகவில் உள்ளனர். இருப்பினும், அவர்கள் கட்சி முடிவுக்குக் கட்டுப்பட்டு பணியாற்றுவார்கள். நாங்கள் பிரிந்து தனித்தனியாகப் போட்டியிட்டாலும் திமுக தான் எதிரி என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications