காங்கிரஸை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும்.. அதிமுகவிடம் மல்லுக்கட்டும் பாஜக.. எவ்வளவு சீட் தெரியுமா?
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியை விட கூடுதலாக குறைந்தபட்சம் 30 தொகுதிகள் அல்லது அதற்கு மேலான தொகுதிகளை அதிமுகவிடம் பாஜக கேட்க அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. இந்த முறை நான்கு முனை போட்டி நிலவ உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் மீண்டும் பாஜக இணைந்துள்ளது. கடந்த ஆண்டே கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்னும் இருகட்சிகள் இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படவில்லை. இழுபறி நீடித்து வருகிறது.
அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய்?
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் தான் தொகுதி பங்கீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் பாஜக கூட்டணியில் விஜய் இணைவாரா? என்பது பெரிய கேள்விக்குறித்தான்.
களமிறங்கிய பிஎல் சந்தோஷ்
இது ஒருபுறம் இருக்க பாஜக தமிழகத்தில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. பாஜக சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் தேர்தல் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து தமிழக தேர்தல் பார்வையாளர்களை நியமிக்கப்பட்டவர்களுடன் பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் ஆலோசனை மேற்கொண்டார்.
மொழி சிறுபான்மையினரின் வாக்கு
இதில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் திமுகவுக்கு கிடைக்கும் மொழி சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவது எப்படி? என்பது பற்றியும், எல்லையோர மாவட்டங்களில் வசிக்கும் பிற மொழி பேசும் மக்களின் வாக்குகளை எப்படி அதிமுக - பாஜக கூட்டணிக்கு கொண்டு வருவது? என்பது பற்றியும் ஆலோசனைகளை வழங்கினார்.
திமுகவின் ஓட்டு வங்கியாக உள்ள தெலுங்கு பேசும் வாக்காளர்கள் உட்பட மொழிசார் சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். ஏப்ரல் 15ம் தேதி வரை தேர்தல் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
குறைந்தபட்சம் 30 தொகுதிகள்
மேலும் அமைப்பு ரீதியாக பாஜகவுக்கான வலுவான தொகுதிகள் பற்றியும், அங்கு செயல்படுத்த வேண்டிய வியூகங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜக அதனை விட கூடுதலாக போட்டியிட வேண்டும். குறைந்தபட்சம் 30 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர். அதோடு காங்கிரஸை விட குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டால் அது கட்சிக்கு பாதமாக இருக்கும் என்று கூறினர். இதுபற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டணி ஆட்சி பற்றி பேசாதீங்க
அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'தனித்து ஆட்சி அமைப்போம்' என கூறி வரும் கருத்து பற்றியும் பிஎல் சந்தோஷ் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதாவது அதிமுகவும், பாஜகவும் என்டிஏ கூட்டணியாக உள்ளது. கூட்டணிக்கு தலைமை அல்லது கூட்டணி ஆட்சி என்பது பற்றி மாநில தலைவர்கள் யாரும் பேச வேண்டாம். இதுபற்றி தேசிய தலைமை முடிவெடுத்து கொள்ளும்'' என்றார்.
எடப்பாடி வழங்குவாரா?
இந்த கூட்டம் பற்றி நயினார் நாகேந்திரன் கூறுகையில், ''தொகுதி பங்கீடு பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை'' என்றார். இருப்பினும் பாஜக குறைந்தபட்சம் 30 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்து காய்நகர்த்தி வருகிறது. ஆனால் பாஜகவுக்கு அவ்வளவு இடங்களை எடப்பாடி பழனிச்சாமி வழங்குவாரா? இது சாத்தியமாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடையை அறிய இன்னும் சில நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும்.
-
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
"150 கிராம் தங்கம், ரூ.39 லட்சம் சொத்து.. ரூ.5.11 லட்சம் கடன்.." சீமானின் சொத்து மதிப்பு இதுதான் -
ஜோசப் விஜய் பெரம்பூரில் கால் வெச்சதுமே? புகையுது தவெக? ரூ.100 கோடி பிராமிஸ் தந்த அந்த விஐபி யார் -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்! -
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்! -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
திமுக VS அதிமுக.. சென்னையில் 12 இடங்கள் உள்பட 121 தொகுதிகளில் நேரடி போட்டி.. மாவட்ட வாரியாக முழு லிஸ்ட் -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
அதிமுகவுக்கு ஆதரவு.. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்கு நீலம் பண்பாட்டு மையம் சப்போர்ட்! பா.ரஞ்சித் அறிவிப்பு -
"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி!











Click it and Unblock the Notifications