பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!
சென்னை: 27 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது பாஜக. கடந்த தேர்தலில் பாஜக சார்பில் 4 பேர் எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்ற நிலையில் அவர்களில் 3 பேருக்கு மட்டுமே தற்போது சீட் வழங்கப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 27 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து, அமமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதிமுக, அமமுக, தமாகா ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

பாஜகவுக்கு மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி (தனி), திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
பாஜக 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட மொடக்குறிச்சி, நாகர்கோவில், குளச்சல், ராமநாதபுரம், தளி, திருவண்ணாமலை, உதகமண்டலம், விளவங்கோடு ஆகிய 7 தொகுதிகளை மட்டுமே மீண்டும் பெற்றுள்ளது. பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த முறை வென்ற நெல்லை மற்றும் வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் இந்த முறை பாஜக போட்டியிடவில்லை.
இந்நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்முறையாக சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த முறை அவர் நெல்லை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றார்.
கடந்த முறை கோவை தெற்கில் வென்ற வானதி சீனிவாசன் இந்த முறை கோவை வடக்கில் களமிறங்க உள்ளார். கடந்த முறை நாகர்கோவிலில் போட்டியிட்டு வென்ற எம்.ஆர்.காந்திக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டு உள்ளது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதிக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அவரது மருமகளான கிருத்திகா சிவகுமார் மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்க உள்ளார். அவினாசி (தனி) தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் போட்டியிடுகிறார். விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி போட்டியிடுகிறார்.
பாஜக வேட்பாளர்கள் பட்டியல்
எல். முருகன் - அவிநாசி
நாகேஷ் குமார் - தளி
மொடக்குறிச்சி - கிருத்திகா சிவகுமார்
தங்கராஜ்- திருப்பூர் தெற்கு
நயினார் நாகேந்திரன் - சாத்தூர்
கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் - திருச்செந்தூர்
எம்.ஆர். காந்தி - நாகர்கோவில்
பி.ரமேஷ் - பத்மநாபபுரம்
சிவக்குமார் - குளச்சல்
விஜயதாரணி - விளவங்கோடு
ஏழுமலை - திருவண்ணாமலை
கருப்பு முருகானந்தம் - தஞ்சாவூர்
ராமச்சந்திரன் - புதுக்கோட்டை
ஆனந்தன் அய்யாசாமி - வாசுதேவநல்லூர்
ஜி.பி.எஸ். நாகேந்திரன் - ராமநாதபுரம்
பிரேம் குமார் - ராசிபுரம்
தமிழிசை சௌந்தரராஜன் - மயிலாப்பூர்
ராஜசிம்ம மஹிந்திரா (அஸ்வின்குமார்) - ஆவடி
வானதி சீனிவாசன் - கோயம்புத்தூர் வடக்கு
போஜராஜன் - உதகமண்டலம்
உதயகுமார் - கந்தர்வகோட்டை
கே.சி.திருமாறன் - திருப்பத்தூர்
கவிதா ஸ்ரீகாந்த் - அறந்தாங்கி
ராம சீனிவாசன் - மதுரை தெற்கு
பாலகிருஷ்ணன் - ராதாபுரம்
கோவி சந்துரு - திருவாரூர்
பொன் பாலகணபதி - மானாமதுரை
-
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்!












Click it and Unblock the Notifications