சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாமக அதிமுகவை கொஞ்சுவதும்.. அதிமுக பாமகவை புகழ்வதும்.. பாஜகவுக்கு ஏதோ மெசேஜ் சொல்வது போல இருக்கே

அதிமுக-பாமகவின் கூடுதல் நெருக்கம் பாஜகவுக்கு பின்னடைவாக இருக்குமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு-வீடியோ

    சென்னை: ஒரே சிரிப்பு.. குஷி.. குதூகலம்.. மகிழ்ச்சி.. ஆத்ம திருப்தியுடன் அதிமுக-பாமக விருந்து நேற்று முடிந்திருக்கிறது! ஆனால் இந்த கூட்டணியில் பாஜக நிலை கொஞ்சம் பரிதாபம் போலத்தான் இருக்கிறது.

    தமிழகமே கண் வைக்கும் அளவுக்கு ஒரு மெகா கூட்டணி அதிமுக தலைமையில் உருவாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணமே பாமகதான்!

    பாமக இணைந்ததால் மெகா கூட்டணியாக உருவாகிவிட்டது என்று அதிமுக மகிழ்கிறதா? அல்லது கேட்டதைவிட அதிகமாகவே 7+1 என்று கிடைத்துவிட்டதே என்று பாமக புளகாங்கிதப்படுகிறதா தெரியவில்லை. ஆனால் ரெண்டு தரப்புமே செம ஆக்டிவ்வாக இருக்கிறார்கள்.

    சிவி சண்முகம்

    சிவி சண்முகம்

    நேத்து ராத்திரி நடந்த விருந்தின்போது நிறைய மகிழ்ச்சி தருணங்கள் ஏற்பட்டிருக்கிறது. அதிமுகவும், பாமகவும் கூடுதல் நெருக்கத்தை ஒருவருக்கொருவர் காட்டியிருக்கிறார்கள். வரவே மாட்டேன் என்று முரண்டு பிடித்த சிவி சண்முகத்தையே விருந்துக்கு வரவழைத்துவிட்டார்களே!!

    நெருக்கம்

    நெருக்கம்

    அப்படியானால் கூட்டணி என்பது இணக்கமாக ஒன்றாக இருக்க வேண்டும் என்றும், சர்ச்சை, விவாதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோருமே இணைந்து பலத்தை காட்ட வேண்டும் என்பதாலேயே, இருக்கும் அதிமுக முக்கிய தலைகளைவிட்டுவிட்டு சிவி சண்முகத்தை சமாதானப்படுத்தி வரவழைத்துள்ளனர். அதிமுக-பாமகவின் நெருக்கம் இனியும் கூடப்போவது நிச்சயம் என்று தெரிகிறது.

    எச்.ராஜா

    எச்.ராஜா

    ஆனால் இதில் பாஜகவின் பங்கு என்ன என்பது தெரியவில்லை. தேசிய கட்சியாக இருந்தாலும், எம்பி தேர்தலே என்றாலும் கொடுத்த 5சீட்டை வாங்கி கொண்டு போய்விட்டார்கள். தமிழகத்தில் தங்கள் கட்சியின் யதார்த்த நிலைமையை புரிந்து கொண்டு வாங்கி சென்றார்களா, அல்லது அதிருப்தியில் நடந்ததா என தெரியவில்லை. அதேபோல தொகுதி பங்கீட்டில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்க கூடாது என்று ஒரு தடா போட்டதாகவும் சொல்லப்படுகிறது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி

    இன்னொரு பக்கம் தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தராஜனை நிறுத்த கூடாது என்று அதிமுகவின் ஒரு தரப்பு சொல்வதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால், அதிமுக பாஜகவை ஒதுக்க ஆரம்பித்துள்ளதோ என்ற சந்தேகம் வலுக்கிறது. இது பாமக அதிமுகவுக்கு தந்த பலமாகவும் இருக்கலாம். ஆனால் இப்படியே இந்த நெருக்கம் கூடினால் பாஜக நிலை இனி தமிழகத்தில் பரிதாபம்தான்.

    எம்பி தேர்தல்

    எம்பி தேர்தல்

    எம்பி தேர்தலிலேயே அதிமுகவும்-பாமகவும் பாஜகவை இப்படி நடத்துகிறார்கள் என்றால், வரும் சட்டமன்ற தேர்தலில் சொல்லவே தேவையில்லை. இந்த தேர்தலுக்கே வெறும் 5 என்றால், அந்த தேர்தலில் இதுகூட கிடைக்காது என்றே தெரிகிறது.

    தாமரை

    தாமரை

    இன்னும் தேர்தலில் இந்த கூட்டணியின் வெற்றி, வாக்கு சதவீதம் அதிகமாகவே வந்துவிட்டால், எதிர்காலத்தில் பாஜக தமிழகத்தில் வேரூன்ற வாய்ப்பில்லை. அதனால் தமிழகத்தில் எப்போதுமே தாமரையை மலர முடியாத அளவுக்கு செய்வது கண்டிப்பாக அதிமுக, பாமகவாகத்தான் இருக்க முடியும்.

    English summary
    BJP's importance in the coalition has been reduced due to the intimacy of ADMK-PMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X