"தனி நாடு".. சீறிய திருமாவளவன்.. ஒரத்தநாடு மாதிரி 'தமிழ்நாடு' வெறும் பெயர்தான்.. "டென்ஷன்" ஆன பாஜக
சென்னை: ஒரத்த நாடு, வருச நாடு என்பது போல் 'தமிழ்நாடு' என்பதும் வெறும் பெயர் மட்டுமே என திருமாவளவன் பேச்சுக்கு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி விளக்கம் கொடுத்துள்ளார்.
'தனி நாடு' குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்த கருத்துக்கு நாராயணன் திருப்பதி இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
மேலும், 'பிரிவினைவாதம்' பேசுபவர்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில், சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர் ஜெ.பாரத் எழுதிய 'திருமாவின் சிந்தனை கோட்பாடுகள்' எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய திருமாவளவன் "அரசியல் என்பது பதவிக்காக, அதிகாரத்திற்காக பொருள் ஈட்டுவதற்கான வாய்ப்பு என்கிற உணர்வு இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. மிக மிக குறைந்த நபர்கள்தான் கொள்கை கோட்பாடுகள் குறித்து ஆர்வம் காட்டி விவாதிக்கிறார்கள். அனைத்து காட்சியிலும் இந்த நபர்கள் குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளனர்.

செயல் திட்டம்
ஆனால் அப்படிப்பட்டவர்கள்தான் முக்கிய பொறுப்புகள் பெற்று கட்சியை வழி நடத்துவார்கள். 'அடங்க மறு, அத்துமீறு, திருப்பி அடி' என்பது கொள்கையா? கோட்பாடா? என பலர் கேள்வியெழுப்புகின்றனர். அவர்களுக்கான பதில் இதுதான். அதாவது இது ஒரு செயல் திட்டம். ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் இவை மூன்றும்தான் உழைக்கும் மக்களுக்கு பகை. சாதி, முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், குடும்பம், என இவை எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆக இவற்றிற்கு எதிராக ஒடுக்கப்படுகிற மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கொள்கை முழக்கம்தான் 'அடங்க மறுத்தல், அத்துமீறுதல், திருப்பி அடித்தல்'.

சாதி தூய்மை வாதம்
இது வன்முறை முழக்கம் அல்ல, வன்முறைக்கு எதிரான முழக்கம். மராத்வாட பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டோம். அப்போது காவல் துறை எங்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு விசிக பின்வாங்கிவிடாது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இது ஒருபுறம் எனில் மறுபுறம் ஆணவ கொலைகள் குறித்து நாம் விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது. ஆணவ கொலைகளை ஆதரிக்கிறவர்கள் சாதி தூய்மைவாதிகள். தூய்மை வாதம் என்பது பழமை வாதம், சனாதனத்தின் ஒரு கூறு.

தனி நாடு
இவற்றையெல்லாம்தான் நாம் எதிர்க்கிறோம். நம்முடைய தளம் தமிழ் தேசியம். இந்த எதிர்ப்பு நம்முடைய இயக்கத்தின் ஒரு கூறு. தமிழ் தேசிய இயக்கங்களில் விசிகவின் பங்களிப்பு மகத்தானது. பெரிய பெரிய கட்சிகள் செய்ய முடியாததை சாத்தியப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வழி தேசியம் வளர்த்தெடுக்கப்பட்டு, அதன் ஒன்றியமாகதான் மத்திய அரசு இருக்க வேண்டும். மாநிலங்களின் ஒன்றியம் என்பதை விட தேசிய இனங்களின் ஒன்றியம் என இருக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இடமில்லை
இந்த கருத்து அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், திருமாவளவனின் இக்கருத்து குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "ஒரத்த நாடு, வருச நாடு, பாப்பா நாடு, முறப்ப நாடு என்பது போல் தமிழ்நாடு என்பது ஒரு மாநிலத்தின் பெயர் மட்டுமே. தனிநாடு என்று பிரிவினைவாதம் பேசுபவர்களுக்கு தமிழ் நாட்டில் இடமில்லை என்பது மட்டுமே தேசியவாதிகளின் ஒரே இலக்காக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

திமுக
இதற்கு முன்னதாக கடந்த ஜூலையில், இதேபோல 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' எனும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியிருந்த திமுக எம்பி ஆ.ராசா, "தந்தை பெரியார், தனி நாடு எனும் கோரிக்கையை வைத்திருந்தார். இளைஞர்களை இதற்கான போராட்டத்தை நடத்துமாறு கேட்டிருந்தார். ஆனால், தற்போது திமுக அண்ணா வழியில் பணித்துக்கொண்டிருக்கிறது. எனவே மாநிலத்தின் சுயாட்சியை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். எங்களை மீண்டும் பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்" என்று பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications