'எங்கிருந்து பாயசம், பாசிசம் வந்துச்சு'.. திமுகவின் பத்மபிரியாவிற்கு பாஜக ஆதரவாளர் சுமதி பதிலடி
சென்னை: ஊழல் பண்ணி கையும் களவுமா மாட்டி, உச்சநீதிமன்றத்தோட வழிகாட்டுதல்ல நடைபெறும் அமலாக்கத்துறை ரெய்டுக்கு இந்த கதறலா? அதெப்படீங்க சுதந்திர போராட்ட தியாகி மாதிரியே பில்டப் குடுக்கறீங்க? என்று பாஜக ஆதரவாளர் சுமதி மேகவர்ணம் பிள்ளை, திமுகவின் பத்மபிரியாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பபட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கதறி அழுததால் செந்தில் பாலாஜி சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜியை வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது. அவர் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் சித்ரவதை செய்யப்படுவதாக திமுகவினர் பலரும் குற்றம் சாட்டி உள்ளனர். அவரை 2015 வழக்கிற்கு இப்போது கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். திமுகவினர் பலரும் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
பணத்துக்கும் பிணத்துக்கும் நடுவில் ஒரு அரசியல் நடக்கிறது என்று திமுகவைச் சேர்ந்த பத்ம பிரியா ஆவேசமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் இதுபற்றி வீடியோவில் கூறுகையில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி அமைச்சருக்கே இந்த ஜனநாயக நாட்டில் இப்படிப்பட்ட ஒரு நிலைமை என்றால், அப்ப சாமானியர்களின் நிலைமை?, ஒன்றிய பாசிச ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட பாஜக எந்த மாநிலத்திற்குள் எல்லாம் நுழைய முடியவில்லையோ, அந்த மாநிலத்தில் எல்லாம் ஏதாவது ஒரு குடைச்சல் கொடுக்கிறது. ஆளுநர் மூலமாகவோ, வருமான வரித்துறை ரெய்டு மூலமாகவோ கொடுக்கிறது. இது எப்பவுமே பண்ணிக்கிட்டு இருக்குற ஒன்றுதான்.
ஆனால் அதை எல்லாம் தாண்டி, கொலை பண்றவன், கொள்ளை அடிக்கிறவன், கற்பழிக்கிறவன், நாட்டை அடமானம் வச்சவன், எல்லாமே உங்கக்கூட(பாஜக) இருக்கான். இல்லை உங்க கூட போஸ்டிங்கிலேயே உட்கார்ந்துகிட்டு இருக்கான், வெளியில் இருந்து உங்கள கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கான். அவங்க எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்கல்ல.. அவங்க மீதெல்லாம் எந்த ரெய்டும் கட்டவிழ்த்து விடப்படாதில்ல..

இங்க பெண்கள் வந்து கர்ப்பிற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். உத்தரகாண்டில் மதக்கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. மணிப்பூர் இன்னமும் பற்றி எரிந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஐடி ரெய்டு நடக்குது.. எந்த மாநிலத்தில எல்லாம் பிரச்சனை இருக்கோ, அங்கு ஒரு குழப்பத்தை கிரியேட் செய்ய ஒரு ஆளை அனுப்பி வச்சிடுவீங்க.. நீங்க அங்க இருந்து உங்களால பண்ண முடிஞ்சதை பண்ணிக்கிட்டே இருப்பீங்க..
இந்த பணத்துக்கும் பிணத்துக்கும் நடுவில் பண்ற அரசியலை மக்கள் பார்க்கலைன்னு நினைச்சுகிட்டு இருக்கீங்களா, உங்களுக்கு எதிராக இன்றைக்கு எல்லா சக்திகளும் ஒன்றுபட ஆரம்பித்துவிட்டார்கள். 2024 தேர்தல் பயம் தான் இது அப்படீங்கிறது வெளிப்படையாக தெரிகிறது" இவ்வாறு பத்மபிரியா ஆவேசமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
திமுகவின் பத்மபிரியா வெளியிட்ட வீடியோவிற்கு பாஜக ஆதரவாளர் சுமதி மேகவர்ணம் பிள்ளை பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். ஊழல் பண்ணி கையும் களவுமா மாட்டி, உச்சநீதிமன்றத்தோட வழிகாட்டுதலில் நடைபெறும் அமலாக்கத்துறை ரெய்டுக்கு இந்த கதறலா? அதெப்படீங்க சுதந்திர போராட்ட தியாகி மாதிரியே பில்டப் குடுக்கறீங்க? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக ஆதரவாளர் சுமதி மேகவர்ணம் பிள்ளை வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில், "அடேங்கப்பா இவ்வளவு கோர்வையாக பொய் பேச உங்களால் மட்டும் தான் முடியும். போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தப்ப வேலை வாங்கித்தரேன்னு சொல்லி பணத்தை வாங்கிட்டு, அவங்க கோர்ட்டில் போய் கேஸ் போட்ட உடனே பணத்தை திருப்பி கொடுத்துட்டா சரியாக போயிடுமா.. இதுவந்து உச்சநீதிமன்றத்தோட தீர்ப்பு. அமலாக்கத்துறையில முழுக்க முழுக்க கையில் ஆதாரங்களை வைத்துக்கொண்டு செய்றாங்க.. இதில் எங்கிருந்து பாயசம், பாசிசம் வந்துச்சு..
ஊழல் பண்ணி கையும் களவுமா மாட்டி, உச்சநீதிமன்றத்தோட வழிகாட்டுதல்ல நடைபெறும் அமலாக்கத்துறை ரெய்டுக்கு இந்த கதறலா????
— Sumathi Megavarnam Pillai (@Sumamega) June 14, 2023
அதெப்டிங்க சுதந்திர போராட்ட தியாகி மாதிரியே பில்டப் குடுக்கறீங்க??? https://t.co/KvpX1mFUq3 pic.twitter.com/8Xg01U6i0J
நீங்க தப்பு பண்ணுவீங்க.. தப்பு பண்ணுனவங்க மேல சட்டப்படி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தா, உடனே வந்து இது ஜனநாயக நாடா என்று எல்லாம் கேட்குறீங்க.. ஜனநாயக நாட்டில் ட்விட்டரில் கமெண்ட் போட்டவன், பேஸ்புக்குல போஸ்ட் போட்டவன எல்லாம் துரத்தி துரத்தி அரஸ்ட் பண்றீங்க.. அதுவந்து பாசிசம் கிடையாதா,.. ஊழல் பண்ணி தப்பு பண்ணுனவங்களை அரஸ்ட் பண்றது தான் பாசிசமா, என்னா உங்க நியாயம்?
ஜனநாயக நாட்டுல, விசாரணை பண்ண போறாங்க, அரஸ்ட் பண்ண போறாங்க. இதுக்கே நெஞ்சை பிடிச்சுகிட்டு இருக்காரு, வாக்கிங் எல்லாம் போய்ட்டு வந்துருக்காரு, இப்ப என்னடான்னா, ஆஞ்சியோ பண்ணனும், பைபாஸ் பண்ணனும்னு சொல்றாங்க.. 10 வருசம் நாட்டுக்காக எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம சிறையில் இருந்துட்டு, என்னை வந்து விடுவியுங்க.. என்று கிளமென்சி பெட்டிசன் கொடுத்த சாவர்க்கர, நீங்க எல்லாரும் வந்து மன்னிப்பு கடிதம் கொடுத்தாரு, வெள்ளக்காரன் ஷுவ நக்குனாருன்று அசிங்கப்படுத்துனீங்க.. ஆனால் நீங்க ஜெயிலுக்குள்ள போறதுக்கே தொடை நடுங்குறீங்க.. சாவர்க்கர பத்தி பேசுறதுக்கு எல்லாம் உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு.. பாஜகவை பற்றி பேச உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு" இவ்வாறு சுமதி மேகவர்ணம் பிள்ளை தனது ட்விட்டர் பதிவில் பேசிய வீடியோவில் கூறியுள்ளார்.
-
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்!












Click it and Unblock the Notifications