கோவில்களில் செல்போனுக்கு தடை வேண்டாம்.. கட்டுப்பாடு விதிக்கலாமே! திடீர் கோரிக்கை விடுத்த பாஜக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவில்களில் செல்போனுக்கு முழுமையாகத் தடை விதிக்காமல் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் எனவும், கோவில்களில் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது தடை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், முற்றிலும் செல்போன்களுக்குத் தடை விதிப்பது பக்தர்களுக்குப் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் என பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," தமிழ்நாட்டில் உள்ள 52 முக்கியமான இந்து திருக்கோவில்களில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போனைப் பாதுகாக்க, அதற்கென வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

BJP

கோவில்களில் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது தடை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், முற்றிலும் செல்போன்களுக்குத் தடை விதிப்பது பக்தர்களுக்குப் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும்.

இந்து கோவில்கள் பரந்து விரிந்தவை. கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பிறகு, அங்குள்ள மண்டபங்கள், வளாகங்களில் அமர்ந்து பேசுவது, பிரசாதம் சாப்பிடுவது பக்தர்களின் வழக்கம். கோவிலுக்கு குடும்பமாக, உறவினர்களுடன், நண்பர்களாக வருபவர்கள், கோவிலுக்குள் வெவ்வேறு இடங்களில் இருந்தால், அவர்களைத் தொடர்புகொள்ள செல்போன் அவசியம். செல்போன் தடையில் குழுவாக, அதுவும் வயதானவர்களுடன் செல்பவர்களுக்கு சிரமம் ஏற்படும்.

கோவிலின் கட்டடக் கலை அம்சங்கள், சிற்பங்கள் முன்பு புகைப்படம் எடுப்பார்கள். அது அவர்களுக்கு நினைவாக இருக்கும். சமூக ஊடகங்களிலும் பதிவிடுவார்கள். அதன் மூலம் அக்கோவிலின் கலை அம்சத்தையும், ஆன்மிகச் சிறப்புகளையும் மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியும். செல்போன் தடையில் இவை அனைத்தும் தடுக்கப்படுகின்றன.

எனவே, கோவில்களில் முழுமையாகச் செல்போனுக்குத் தடை விதிக்காமல், மூலஸ்தானத்தில் மட்டும் தடை விதிப்பது, மூலஸ்தானத்தை மட்டும் படம் எடுக்கத் தடை விதிப்பது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கலாம். மாறாக, செல்போன் கொண்டு செல்லவே தடை விதிப்பது பக்தர்களுக்கு தேவையற்ற மனஉளைச்சலை ஏற்படுத்தும். இதைக் கவனத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை செயல்பட வேண்டும்." என கூறியுள்ளார்.

தமிழக நகரங்களில் பெரும்பாலானவை கோவில் நகரங்களாகவே இருக்கின்றன. குறிப்பாக திருச்சி, காஞ்சிபுரம், மதுரை என பெரும் கோவில் நகரங்களை கொண்டது தான் தமிழ்நாடு. அதே நேரத்தில் கோவில்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிலர் மொபைல் போனில் செல்பி, ரீல்ஸ் எடுப்பதும் கோவில் கருவறையில் உள்ள சுவாமி புகைப்படங்களை வீடியோ எடுத்து பரப்புவதாகவும் இதனால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தொடர் புகார்கள் இருந்தது.

மேலும் கோவில் பிரகாரம் மற்றும் வளாகங்களில் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள 52 கோவில்களில் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தமிழக இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. கோவில் வளாகங்களில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் 5 ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டு கோயிலுக்கு செல்லலாம்.

மொபைல் போன்களை அங்கு வைத்துவிட்டு பின் தரிசனம் முடிந்ததும் செல்போன்களை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே இதேபோல பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இந்த தடை இருக்கும் நிலையில் தற்போது இந்த 50க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு இந்த தடை விரிவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவில்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என்ற அரசின் உத்தரவுக்கு ஒரு புறம் ஆதரவு மறுபக்கம் எதிர்ப்பும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+