அண்ணாமலை அரை கிமீ நடக்க 15 லட்சம் செலவு செய்வேன்.. ஜோதிமணிக்கு எதிராக பாஜக நிர்வாகி பகிரங்க வீடியோ
சென்னை: என் தலைவன் நடக்கப்போற அந்த அரை கிலோ மீட்டருக்கு 15 லட்ச ரூபாய் செலவு பண்ண போகிறேன்.. அண்ணாமலையை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.. கரூர் எம்.பி.ஜோதிமணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக நிர்வாகி சற்குரு செந்தில்குமார் பகிரங்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி எம்பியான ஜோதிமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். அப்போது ஜோதிமணி எம்பி கூறுகையில், தமிழ்நாட்டில் பாஜகவை பொறுத்தவரை நோட்டா உடன் தான் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறது. முதலில் நோட்டாவை விட அதிக ஓட்டு வாங்கட்டும்.. அப்புறம் மற்ற விஷயங்களை பற்றி பேசலாம்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஊடகங்கள் இந்த கேள்வியை கேட்க வேண்டும்.. அவர் எந்தவிதமான அரசு பதவியிலும் இல்லாமலேயே யாத்திரை என்ற ஒன்றை நடத்தி, ஒரு மிகப்பெரிய வசூல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதாக மிகப்பெரிய குற்றச்சாட்டு உள்ளது.
சமீபத்தில் எம்எஸ்எம்இ என்ற பெயரில் போலி அமைப்பை உருவாக்கி பல்வேறு சிறுகுறு தொழில் நிறுவனங்களை நடத்துவோரிடம் கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளது. இதில் அண்ணாமலைக்கு பங்கு உள்ளதாக அந்த ஊழலில் ஈடுபட்டவரே சொல்கிறார். போலி எம்எஸ்எம்இ நடத்திய முத்துராமனுக்கும் அண்ணாமலைக்கும் தொடர்பு உள்ளது. இந்த பிரச்சனையை பற்றி நான் இறங்கி ஊடகத்திடம் சொன்ன பிறகு அண்ணாமலையிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.. இதுபற்றி ஊடகங்கள் அண்ணாமலையிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று ஜோதிமணி கூறினார்.

இதற்கு பதில் அளித்து பகிரங்கமாக வீடியோ வெளியிட்டுள்ள பாஜக நிர்வாகி சற்குரு செந்தில்குமார், அதில் பேசுகையில், "ஜோதி மணி எம்பி உங்களுக்குத் நான் பேசுறேன்.. அண்ணாமலை எம்பி இல்லை.. எம்எல்ஏ இல்லை.. கவுன்சிலர் இல்லை ஆனால் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு இவ்வளவு காசு வருகிறது என்று கேட்குறீங்க.. நான் சொல்கிறேன்.. வரப்போகிற ஜனவரியில் என் மண்டலத்தில் அண்ணாமலை வரப்போகிறார்..
அவர் அரை கிலோ மீட்டர் தான் என் மண்டலத்தில் நடக்க போகிறார்.. அதுக்கே 15 லட்சம் செலவு செய்ய போகிறோம் எங்கள் கட்சியில்.. மண்டல நிர்வாகிகள், நான் உள்பட எல்லாரும் சேர்ந்து அரை கிலோ மீட்டருக்கு 15 லட்சம் செலவு செய்ய போகிறோம்.. இது எங்களுடைய சொந்த காசு, நாங்க உழைச்ச காசு.. ஒவ்வொரு தொண்டனும் அவனுடைய உழைச்ச காசை போட்டு 15லட்சம் ரூபாய்க்கு பிளான் பண்ணி வச்சிருக்கோம்.. புரியுதா.. எங்க தலைவருக்கு யாரும் காசு கொடுக்க வேண்டியதில்லை.. நாங்களே செலவு செய்வோம்.
Jothymani mp what is qualification in public. How to ask question to my leader k. அண்ணாமலை pic.twitter.com/733MhiXvYg
— Sarguru Senthilkumar BJP (@SarguruSenthil2) November 20, 2023
உங்களை போல் திமுக எம்எல்ஏ கூட சேர்ந்து கொள்ளையடிச்சிட்டு சுற்றுவது போல் இல்லை.. உங்களால் பதில் சொல்ல முடிகிறதா.. எதாவது நின்று பதில் பேசுறீங்களா.. செய்தியாளர்கள் கேட்டால் காரில் ஏறி பறந்து விடுறீங்க.. ஏன் அப்படி ஓடுறீங்க.. அண்ணாமலை பற்றி பேச ஒரு துளி தகுதி கூட உங்களுக்கு இல்லை" இவ்வாறு காட்டமாக பாஜக நிர்வாகி சற்குரு செந்தில்குமார் பேசியுள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications