பாஜக பற்ற வைத்த தீ.. "சாமி"க்கு எல்லாம் தெரியுமாமே.. அடுத்து என்ன நடக்குமோ.. மிரட்சியில் புதுச்சேரி!
3 நியமன எம்எல்ஏக்கள் நியமனம் குறித்து ரங்கசாமிக்கு தெரியும் என்கிறது பாஜக
சென்னை: நடக்கிறது எல்லாமே ரங்கசாமிக்கு தெரியும்.. 3 எம்எல்ஏக்கள் நியமனம் கூட அவருக்கு தெரியும் என்று பாஜக தெரிவித்துள்ளது, புதுச்சேரி அரசையே மிரள வைத்து வருகிறது.
இந்த முறை புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி இரண்டும் சேர்ந்து 16 இடங்களை பிடித்தது.. அதன்படி என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியும் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
ஆனால், திடீரென அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்படவும் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கிறார்.. பதவியேற்ற உடனேயே தொற்று பாதிப்பு வந்துவிட்டதால், அமைச்சர்கள் யாரையும் அவர் நியமனம் செய்யவில்லை..

பதவிப்பிரமாணம்
அதனால், அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் பதவிப்பிரமாணமும் எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில்தான், பாஜகவை சேர்ந்த வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு ஆகிய 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக மத்திய உள்துறை நியமனம் செய்து அறிவித்தது. இது புதுச்சேரி அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது..

அதிர்ச்சி
முதல்வர் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது, இப்படி ஒரு நியமனம் தேவையா? ரங்கசாமிக்கு தெரிவிக்கப்படாமலே இப்படி அறிவிக்கப்பட்டுள்ளது என்ற சலசலப்புகள் எழுந்தன.. எனவே, இந்த 4 நாட்களாகவே புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினரிடையே அதிருப்தியும் எழுந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், நியமன எம்எல்ஏக்கள் 3 பேரும் புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..

ரங்கசாமி
இந்த சம்பவம் அதற்கு மேலும் ரங்கசாமி ஆதரவாளர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. பின்னர் பாஜக மாநில தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது அவர்கள், "புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குணமடைந்த பிறகே அமைச்சர்கள் பதவி ஏற்பு நடைபெறும்... ஆனால் நியமன எம்எல்ஏக்கள் நியமனம் குறித்து கூட்டணிக் கட்சிகளுக்கும் தெரியும்.. முதல்வர் ரங்கசாமிக்கும் தெரியும்.

சிகிச்சை
சிகிச்சை முடிந்து ரங்கசாமி வந்த பிறகே அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவி ஏற்பு நடக்கும்... இந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்... தேசிய ஜனநாயக கூட்டணிக்குப் போதிய பலம் இருக்கிறது. தங்களது தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற அடிப்படையில், சுயேட்சை எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்... கூட்டணியில் ஒரு குழப்பமுமில்லை" என்று கூட்டாக தெரிவித்தனர்.

அறிவிப்பு
ஆனால், என்ஆர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் N.S.J. ஜெயபால் இதை உடனடியாக மறுத்துள்ளார்.. இது சம்பந்தமாக ஒரு அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.. அதில், "சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் தொகுதி பங்கீடு மட்டுமே பேசி முடிவு செய்யப்பட்டது... நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் சம்பந்தமாக பங்கீடு கேட்டதற்கு, தேர்தலுக்குப் பிறகு டெல்லியில் பேசி முடிவு செய்துகொள்ளலாம் என்று உறுதி செய்யப்பட்டது.

குழப்பம்
அதனால், இப்போது நியமனம் செய்யபட்டிருக்கும் பாஜக எம்எல்ஏக்கள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது" என்று அதில் விளக்கம் தந்துள்ளார். ஆக, ரங்கசாமிக்கு எல்லாம் தெரியும் என்று பாஜக பகீர் தகவல் வெளியிட்டுள்ளது, மறுபடியும் புதுச்சேரி அரசியலில் குழப்பத்தை விளைவித்து வருகிறது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications