சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?
சென்னை: கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறை 4 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
2024 லோக்சபா தேர்தலில், பாஜக தனி அணியாக தேர்தலைச் சந்தித்தது. 19 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும் 11.24% வாக்குகளைப் பெற்றது பாஜக. இந்நிலையில், மீண்டும் தற்போது அதிமுக உடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திக்கிறது.

2011 சட்டசபை தேர்தல்
2011 சட்டசபை தேர்தலில் பாஜக, தனி அணியாகப் போட்டியிட்டது. தமிழ்நாட்டில் பாஜக 204 சட்டசபை தொகுதிகளிலும், சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில் பாஜக கூட்டணி அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது.
2016 சட்டசபை தேர்தல்
2016 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் 6 முனை போட்டி நிலவியது. திமுக, அதிமுக கூட்டணி, மக்கள் நலக் கூட்டணி, பாஜக, நாம் தமிழர் கட்சி, பாமக என 6 முனை போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான கூட்டணியில் பாஜக 141 தொகுதிகளிலும், ஐஜேகே 45 தொகுதிகளிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் 24 தொகுதிகளிலும், கொங்கு ஜனநாயகக் கட்சி 4 சீட்களிலும் போட்டியிட்டன. இதில் பாஜக 1 சீட்டில் கூட வெற்றி பெறவில்லை.
2021 சட்டசபை தேர்தல்
2021 சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. அதிமுக நேரடியாக 179 தொகுதிகளிலும் பாமக 23 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது பாஜக. நெல்லை, மொடக்குறிச்சி, நாகர்கோவில், கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.
2026 சட்டசபை தேர்தல்
2021 சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு உடன்பாடு இன்று எட்டப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications