முதல்வரின் துபாய் பயணம் பற்றி பாஜக நிர்வாகி வதந்தி.. ஸ்கிரீன் ஷாட் போட்ட பிடிஆர்.. தூக்கியது போலீஸ்!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப் பயணம் தொடர்பாக சர்ச்சை கருத்து பதிவிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதல்வரின் பயணம் பற்றி வதந்தி பரப்பியதாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி சென்று இருந்தார். கடந்த நான்கு நாட்களாக பல்வேறு சந்திப்புகள், கூட்டங்களை முதல்வர் ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபியில் நடத்தினார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை சென்னைக்கு திரும்பினார். சென்னையில் இன்று அதிகாலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு முதலீடுகள், துபாய், அபுதாபி பயணத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து பேசினார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில் அதுகுறித்து நிறைய வதந்திகள் இணையத்தில் பரப்பப்பட்டது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் தனது தனி விமானத்திற்கு அரசின் பல கோடிகளை செலவிட்டதாக இணையத்தில் வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால் அமைச்சர் தங்கம் தென்னரசோ, இது திமுகவின் கட்சி காசு, தனி விமானத்திற்கு அரசு பணத்தை பயன்படுத்தவில்லை. விமானம் கிடைக்கவில்லை என்பதால் தனி விமானத்தை ஏற்பாடு செய்துள்ளோம் என்று கூறினார்.

ஸ்டாலின் ஜாக்கெட்
இந்த நிலையில்தான் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி செயலாளர் அருள் பிரசாத் என்பவர் முதல்வர் ஸ்டாலினின் உடை குறித்து வதந்தி பரப்பி இருந்தார். முதல்வர் ஸ்டாலின் அணிந்து இருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி ரூபாய் என்று பொய்யாக ட்வீட் செய்து இருந்தார். செய்தி நிறுவனம் ஒன்றின் கார்டை எடிட் செய்து அதில் முதல்வரின் ஜாக்கெட் 17 கோடி ரூபாய் என்று அமைச்சர் பிடிஆர் தெரிவித்ததாக பொய்யாக டைப் செய்து வதந்தி பரப்பி இருந்தார். இதை பலரும் ஷேர் செய்திருந்தனர்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் புகார்
இதையடுத்து இந்த பாஜக நிர்வாகி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் புகாரும் அளித்து இருந்தார். அதில், தமிழ்நாடு காவல்துறையின் புதிய சமூக ஊடக மையத்திற்கு இது முதல் சமர்ப்பிப்பாக இருக்கலாம். வடிகட்டப்பட்ட முட்டாள் இது போன்ற முட்டாள்தனத்தை வெளிப்படையாக இடுகையிடுவதால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை. சங்கிகள் வாட்ஸ்அப் விஷயத்தைத் தாண்டிச் செல்லக் கூடாதா என்று கடுமையாக கேள்வி எழுப்பி இருந்தார்.

பாஜக நிர்வாகி
இந்த நிலையில்தான் தற்போது பாஜக நிர்வாகி அருள் பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். பிடிஆரின் புகாரை தொடர்ந்து, பொய்யான செய்தியை பரப்பி அவதூறு செய்ததாக கூறி பாஜக நிர்வாகி அருள் பிரசாத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பிரச்சாரங்களை தடுக்க 'சமூக ஊடக சிறப்பு மையம்' அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட நிலையில்தான் தற்போது பாஜக நிர்வாகி கைதாகி உள்ளார்.
-
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications