நாடாளுமன்ற கலர் குண்டு அட்டாக்.. குற்றவாளிகளுக்கு பாஜக நிர்வாகி வக்காலத்து! பகத் சிங்குடன் ஒப்பீடு
சென்னை: நாடாளுமன்றத்தில் குண்டு வீசிய பகத் சிங்கை பாராட்டும் நாம், நாடாளுமன்றத்தில் கலர் குண்டு வீசியதை அதுபோல ஏன் பார்க்கக்கூடாது என தொலைக்காட்சி விவாதத்தில் பாஜக பேச்சாளர் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலர் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கைதானவர்களுக்கு மைசூரு பாஜக எம்.பி. பார்வையாளர் மாடத்துக்கான டிக்கெட் வழங்கியது உறுதியானது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் விவாதம் நடைபெற்றது. இதில் பாஜக நிர்வாகி புரட்சி கவிதாசன் கலந்துகொண்டு பேசினார். அவரது பேச்சு தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

"இது போராட்டமா பயங்கரவாத தாக்குதலா என்பதில் சந்தேகம் உள்ளது. அவர்கள் ஒன்றும் ஆயுதங்களை தூக்கிக்கொண்டு செல்லவில்லை. அது வெறும் வண்ணப்பொடிகள். இதே போராட்டத்தை தோழர் பகத் சிங் அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாராளுமன்றத்தில் யாருக்கும் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாலும், வெறும் சத்தம் வரக் கூடிய பட்டாசை வெடித்துவிட்டு துண்டு பிரசுரங்களை கொடுத்துவிட்டு இன்குலாப் ஜிந்தாபாத் என்று சொன்னதை புகழக் கூடியவர்களாக உள்ளீர்கள்.
அவருடைய குரலை ஜனநாயகத்தின் குரலாக நினைக்கிறீர்கள். அது போராட்டம் என்று சொன்னால், இதுவும் போராட்டம். அது ஜனநாயகம் என்று சொன்னால் இதுவும் ஜனநாயகம். பகத் சிங் செய்தால் போராட்டம், இவர்கள் செய்தால் பயங்கரவாதம், இந்தியாவுக்கு தலைகுனிவு என்றெல்லாம் சித்தரிக்காதீர்கள்." என்று பேசி உள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டு வீசியதை பாராட்டும் நாம், தற்போது பாராளுமன்றத்தில் குண்டு வீசியவர்களை கண்டிப்பது ஏன்? பகத்சிங் செய்த போராட்டம் போல இதையும் ஒரு போராட்டமாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?
— பூதம் (@angry_birdu) December 16, 2023
- பாஜக நிர்வாகி புரட்சி கவிதாசன் சுளீர் கேள்வி. pic.twitter.com/PXipyw3uUf
இதனை கேட்ட மார்க்சிஸ்ட் பேச்சாளர் சிந்தன். "அவர்கள் வழியில்தான் நிற்கிறோம். இப்போதும் சொல்கிறோம்." என்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி, "பகத் சிங்கை புகழக் கூடியவர்களுக்காக இவர்கள் புகழ்கிறாரா இல்லையா? தயவு செய்து தவறான கருத்தை சொல்ல வேண்டாம். பகத் சிங்கை கொச்சைப் படுத்துவதைபோல் உள்ளது இவர் பேசுவது. பகத் சிங்கின் புரட்சியை வைத்துக்கொண்டு ஏன் இதை சொல்கிறீர்கள்?" என்றார்.
கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி இந்திய நாடாளுமன்ற தாக்குதல் நடத்தப்பட்டு 22 ஆம் ஆண்டுகள் நினைவு நாளை முன்னிட்டு தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மக்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை அடுத்து மக்களவையில் எம்பிக்கள் பேசிக்கொண்டு இருந்தபோது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து இருந்த இளைஞரும் பெண்ணும் திடீரென அவைக்குள் குதித்தனர். கைகளில் மஞ்சள் நிற புகையை கக்கும் பொருளை வைத்து இருந்த அவர்கள் மேஜைகளில் குதித்து ஓடினர்.
அதேபோல் நாடாளுமன்றத்துக்கு வெளியில் 2 பேர் இதேபோல் மஞ்சள் புகை கக்கும் சிலிண்டரை கையில் வைத்துகொண்டு ஓடினர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்துபோது அவர்களுக்கு பார்வையாளர் மாடத்தில் அமர்வதற்கான டிக்கெட் பெற்றுக்கொடுத்தது கர்நாடக மாநிலம் மைசூர் தொகுதி பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications