அண்ணாமலை வந்தா தான் மக்கள் மீது பாசம் வருமா?.. திமுகவுக்கு எஸ்.ஆர்.சேகர் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டசபையின் 2 நாள் கூட்டத் தொடர் நடந்து முடிந்துள்ளது. இதில் மிகப் பெரிய பிரச்னையாக வெடித்த டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணாமலை வந்தால் மட்டும் தான் ஆளும் திமுக அரசு வேலை செய்யுமா என பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் மோசமாகி வரும் சட்டம் ஒழுங்கு, அதிகரித்து வரும் போதைப் பொருள் புழக்கம் பற்றி முதல்வர் கவலை கொள்ளாமல் இருந்தார். உள் கட்சியிலேயே பல எதிர்க்கட்சிகளை சமாளிப்பதையே முழு நேரப் பணியாக மேற்கொண்டிருந்தார் எதிர்க்கட்சித் தலைவர். இதனால் மக்களுக்காக களத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிப்பது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தான்.

annamalai sr sekar

அண்ணாமலை லண்டனில் இருந்து வருகை தந்தப் பிறகு, வேறு வழியில்லாமல் முதல்வர் உண்மையிலேயே மக்கள் பிரச்னைகள் பற்றி பேச துவங்கியிருப்பது மகிழ்ச்சி. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக பேசியது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் சட்டசபையில் முதல்வர் ஒரு வார்த்தையை கூறி இருக்கிறார்.

'நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தத்திற்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்தோம். அவர்களுக்கு மெஜாரிட்டி இருப்பதால் நிறைவேற்றி விட்டார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும்.' என்ற ரீதியில் ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அதற்கு அமைச்சர் பொன்முடி, 'அவர் பேச வேண்டிய இடத்தில் பேசி கொஞ்சம் நிதி வாங்கி கொடுத்தால் நன்றாக இருக்கும்.' என்று சிரித்தவரே கூறினார்.

மொத்தத்தில் திமுகவிற்கு வாக்களித்து அதன் உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அனுப்புவதில் எந்த பலனும் இல்லை. இதை மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் அமைச்சரும், முதலமைச்சரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமைச்சர் பொன்முடி கூறியது போல, பேச வேண்டிய இடத்தில் பேசி தமிழகத்திற்கான திட்டங்களை / தீர்வுகளை கொண்டு வரப்போவது அண்ணாமலை தான். அண்ணாமலை வந்தால் தான், ஆளும்கட்சிக்கு மக்கள் மீது பாசம் வருமோ.

ஒரு திட்டத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு, பின்பு அதே திட்டத்தை எதிர்ப்பது திமுகவிற்கு ஒன்றும் புதிதல்ல. இந்த வரலாற்று உண்மையை நாம் மறந்துவிட வேண்டாம். திமுக, அதிமுகவின் பங்காளி சண்டை நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கி விட்டார்கள்." என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+