திமுக கவுன்சிலர்கள் கட்ட பஞ்சாயத்து.. முதல்வர் கண்டும் காணாமல் இருக்கிறார்.. அண்ணாமலை குற்றச்சாட்டு!

பொன்னேரி திமுக கவுன்சிலர் விவகாரம் குறித்து அண்ணாமலை கருத்து பதிவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிக குற்றங்கள் நடக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளைப் போன்று தமிழ்நாட்டை திமுகவினர் மாற்றிக் கொண்டிருப்பதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல், திமுக கவுன்சிலர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதை தங்களது முழு நேர தொழிலாக கொண்டுள்ளார்களா என்ற கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, இதனை முதல்வர் ஸ்டாலின் கண்டும் காணாமல் இருப்பதாக விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆலாடு பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி. இவரது பூர்வீக வீட்டில் வாடகைக்கு குடியிருந்த உறவுக்கார பெண் நந்தினியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை காலி செய்ய வைத்துள்ளார்.

ஆனால் வீட்டை காலி செய்த நந்தினி சாவியை வாங்கி வைத்துக் கொண்டார். இந்த சம்பவத்த்னறு நடந்த பேச்சுவார்த்தையின் போது நந்தினிக்கு ஆதரவாக பொன்னேரி 17வது வார்டு திமுக கவுன்சிலர் இளங்கோ, எர்ணாவூர் ஹரிஹரன் உள்ளிட்டோர் காயதிரியையும், அவரது குடும்பத்தினரையும் சரமாரியாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

 நடவடிக்கை எடுக்க மறுத்த போலீஸ்?

நடவடிக்கை எடுக்க மறுத்த போலீஸ்?

வீட்டிற்கு வெளியே வைத்து தாக்கியதோடு, வீட்டிற்குள் செல்ல முயன்ற காயத்ரியையும் அவரது சகோதரி கீர்த்தியையும், நந்தினி மற்றும் திமுக கவுன்சிலர் இளங்கோவின் ஆதரவாளர்கள் அடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளுடன் பொன்னேரி காவல் நிலையத்தில் காயத்ரி புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார், இது சிவில் வழக்கு என்று கூறி அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் காயத்ரி போலீசில் புகாரளிக்க உதவியாக இருந்தவர்களையும் திமுக கவுன்சிலர் இளங்கோவின் ஆதரவாளர்களான வினோத், திலீப் குமார், ராஜ்கிரண் ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது.

ஒருவர் கொலை

ஒருவர் கொலை

இதில் கற்கலால் தாக்கப்பட்ட காயத்ரியின் உறவினரான பாலமுருகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் திமுக கவுன்சரில் ஆதரவாளர்களான திலீப் குமார் மற்றும் ராஜ்கிரண் ஆகியோரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர். இந்த விவகாரம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கவுன்சிலர் கட்டப்பஞ்சாயத்து

கவுன்சிலர் கட்டப்பஞ்சாயத்து

இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், திமுக கவுன்சிலர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதை தங்களது முழு நேர தொழிலாக கொண்டுள்ளார்களா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. பொன்னேரி 17 வது வார்டு கவுன்சிலர் இளங்கோ, ஒரு குடும்ப பிரச்சினையில் தலையிட்டு, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அண்ணாமலை கேள்வி

அண்ணாமலை கேள்வி

அடி வாங்கியவர்கள் காவல்துறையில் புகார் அளித்தும் திமுக கவுன்சிலர் இதில் ஈடுபட்டுள்ளதால், நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் மறுத்திருக்கின்றனர். காவல் துறையினரின் அலட்சியமும் திமுக கவுன்சிலரின் வன்முறை வெறியாட்டமும் இன்று கொலையில் முடிந்திருக்கிறது.
தங்கள் கட்சியினர், தமிழ்நாட்டை உலகின் அதிகம் குற்றம் நடக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்று மாற்றிக் கொண்டிருப்பதை இன்னும் எத்தனை நாள் கண்டும் காணாமல் மௌனமாக இருப்பீர்கள், மு.க.ஸ்டாலின் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+