விலை போகாத 4 கத்திரிகாய்களை அழைத்து வந்து ஸ்டாலினுக்கு மார்கெட் செய்றாங்க! அண்ணாமலை கிண்டல்!
திமுகவை சீண்டும் வகையில் அண்ணாமலை பிரஸ்மீட்.
சென்னை: விலை போகாத 4 கத்திரிகாய்களை சென்னைக்கு அழைத்து வந்து ஸ்டாலினை மார்க்கெட் செய்யும் பணிகளில் திமுக ஈடுபட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்திருக்கிறார்.
ஸ்டாலின் 70வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுனே கார்கே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், ஃபரூக் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் அவர்களை விலை போகாத கத்திரிகாய்கள் என விமர்சித்துள்ளார் அண்ணாமலை.
மல்லிகார்ஜுனே கார்கேவை காங்கிரஸ்காரர்களே மதிப்பது கிடையாது என்றும் அவரை ரிமோட் கன்ட்ரோல் போல் ராகுல் வைத்திருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

விலை போகாத கத்திரிகாய்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சரை வாழ்த்திப் பேசுவதற்காக பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், மல்லிகார்ஜூன கார்க்கே, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் நான்கு பேருமே சந்தையில் விலை போகாத கத்திரிகாய்கள் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

ராகுல் ஏன் வரவில்லை?
பாரத் ஜோடோ யாத்ராவை தொடங்கி வைப்பதற்காக ராகுல் அழைத்தவுடன் ஸ்டாலின் சென்றது போல், ஸ்டாலினின் 70வது பிறந்தநாளுக்கு திமுக அழைத்தவுடன் ராகுல் வந்திருக்க வேண்டியது தானே என்றும் ஏன் ராகுல் வரவில்லை எனவும் வினவினார். ராகுல்காந்தி லண்டனில் இருக்கும் தகவல் தெரிந்து இந்தக் கேள்வியை அண்ணாமலை முன் வைத்தாரா எனத் தெரியவில்லை. இதேபோல் ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக மார்கெட் செய்யும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

கர்நாடக தேர்தல்
ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ திமுக போட்டியிட முன்வருமா என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, கால் சதவீதம், ஒரு சதவீதம் ஓட்டுக்களை கூட தமிழ்நாட்டை கடந்து பிற மாநிலங்களில் திமுகவால் வாங்க முடியாது என்றும் சவால்விட்டார். தேசிய அரசியல் என்றால் என்னவென்றே தெரியாமல் தேசிய அரசியலுக்கு வந்துவிட்டேன் என பீலா விடுவதாக ஸ்டாலினை விமர்சித்தார்.

பிரதமர் வேட்பாளர்
ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வரவேண்டும், பிரதமர் வேட்பாளர் ஆக வேண்டும் என பரூக் அப்துல்லா நேற்றைய தினம் பேசிய நிலையில் அண்ணாமலை இவ்வாறு அதற்கு பதில் கொடுத்திருக்கிறார்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications