எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை.. என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை : அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் 1954 ஆம் ஆண்டு பிறந்த எடப்பாடி பழனிசாமி, தனது 17வது வயதில் எம்ஜிஆர் மீது கொண்ட அன்பால் அதிமுகவில் இணைந்தார். 1973ஆம் ஆண்டு சிலுவம்பாளையம் கிளைச் செயலாளர் பதவியைப் பெற்றார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா அணி சார்பாக எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.

அரசியலில் படிப்படியாக உயர்ந்து ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல் முறையாக கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை மோதலையடுத்து பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். சிலுவம்பாளையும் எனும் சிறிய கிராமத்தில் கிளைச் செயலாளராக அரசியலைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி தற்போது அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளாரக அங்கீகரித்துள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், அன்னதானம் வழங்கியும், அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி பிறந்தாளையொட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமாகிய எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி, நல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும், மக்கள் பணிகளை தொடர இறைவனை வேண்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும், அதிமுக தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி சமூகவலைதளங்கள் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications