அணி மாறுகிறாரா? வளசரவாக்கம் வீட்டில்.. திடீரென பாரிவேந்தரை சந்தித்த எல் முருகன்!
சென்னை: பாஜக மாநில தலைவர் எல் முருகன் திடீரென ஐஜேகே தலைவர் பாரிவேந்தரை சந்தித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபை தேர்தலில் கூட்டணி மாறுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வலுவான கூட்டணி அமைக்க ஒவ்வொரு அணியும் தீவிரமாக செயல்படுகின்றன. அத்துடன் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தி வேலை வாங்கவும் தேர்தல் பணிகளை கட்சிகள் விரைவு படுத்தி உள்ளன.
இதனால் தேர்தல் கள நிலவரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க ஆகியவை தலைமையிலேயே வழக்கம் போல் கூட்டணிகள் அமைய உள்ளன. இதில் தேசிய கட்சியான காங்கிரஸ் திமுகவுடனும், பாஜக அதிமுக உடனும் கூட்டணியில் உள்ளது.

வலிமையாக்க முயற்சி
இதுதவிர கமல்ஹாசன், சீமான் தனியாக உள்ளனர். ரஜினி அரசியல் நிலைப்பாடு இதுவரை தெரியவில்லை. இந்தசூழலில் தமிழகத்தில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக ஆக்ரோஷமாக செயல்படுகிறது. பல்வேறு பிரபலங்களை கட்சியில் இணைத்து வலிமையாக்க முயன்று வருகிறது.

பாரிவேந்தர் எம்பி
இந்நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை பாரிவேந்தர் தலைமையிலான ஐ.ஜே.கே கட்சி தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று இருந்தது. பெரம்பலூர் நாடளுமன்ற,த் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பாரிவேந்தர் எம்பியாக உள்ளார்.

பாரிவேந்தர் வீட்டில் சந்திப்பு
இந்நிலையில் வளசரவாக்கத்தில் உள்ள பாரிவேந்தரின் வீட்டில் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் திடீரென அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரை மணி நேரம் நடந்தது. இந்த சந்திப்பின் போது பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உடன் இருந்ததாக கூறப்படுகிது.

அணி மாறுகிறாரா?
திமுக கூட்டணியில் இடம்பெற்று உள்ள பாரிவேந்தரின் கட்சியை, வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக இடம்பெறும் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியாக இந்த சந்திப்பு இருக்கலாம் என பேசப்படுகிறது. பாஜக நிர்வாகிகள் இந்த சந்திப்பை நட்பு ரீதியான சந்திப்பு என்று தெரிவித்தனர். பாரிவேந்தர் கூட்டணி மாற வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications