சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்வர் பழனிச்சாமியின் வீட்டிற்கு போய் வாழ்த்திய பாஜக மாநில தலைவர் எல்.முருகன்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மாநில தலைவர் எல் முருகன் நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் இன்று நேரில் சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிச்சாமியின் வீட்டிற்கு சென்று வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதிமுக வரும் சட்டசபை தேர்தல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் சந்திக்கிறது. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளதை தமிழகத்தில் பாஜகவின் மூத்த தலைவர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை.

BJP state president L Murugan met Chief Minister Palanisamy

பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று தனது பேட்டியில், அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவித்திருக்கலாம். ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், முதல்வர் வேட்பாளரை தேர்தல் நேரத்தில்தான் அறிவிக்கும் என்று கூறினார். தேர்தலுக்கு முன்பாக கூட்டணிகளில் மாற்றம் ஏற்படலாம். நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம்.

திமுகவுடன் கூட்டணி வைக்கலாம். இந்த இரண்டு கட்சிகளும் இல்லாது வேறு கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம். பாஜக தலைமையில் அணி அமையலாம். எல்லாவற்றுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.

அதே நேரத்தில் மாநில பாஜக தலைவர் எல். முருகன் கூட்டணி பற்றி பேசும் போது, அதிமுக உடன் தான் கூட்டணியில் இருப்பதாக தெரிவித்தார். அதே நேரத்தில் வானதி சீனிவாசனோ, தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று தெரிவித்தார்.

அதிமுகவுக்கு நாலாபக்கமும் செக்? .. பாஜகவின் திட்டம்தான் என்ன.. என்னதான் செய்ய போகுது?அதிமுகவுக்கு நாலாபக்கமும் செக்? .. பாஜகவின் திட்டம்தான் என்ன.. என்னதான் செய்ய போகுது?

இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு நேரில் சென்ற பாஜக தமிழக தலைவர் எல் முருகன் வாழ்த்து கூறியுள்ளார். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.

சட்டசபை தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி பற்றி முடிவு செய்ய முடியும் என்று அதிமுக கூறியுள்ளது. அதே போல பாஜக தலைவர்களும் கூட்டணி மாறலாம் என்று தெரிவித்து வரும் நிலையில் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் எல். முருகன்.

English summary
BJP Tamil Nadu leader L Murugan met Tamil Nadu Chief Minister Edappadi Palanichamy today. Chief Minister met Palanichamy at Greenways Road, Chennai out of respect Congratulations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X