சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தலுக்கு பிறகு... எல்லா தலைவர்களும் ஓய்விலிருக்க... எல்.முருகன் மட்டும் தொடர் சுற்றுப்பயணம்..!

Google Oneindia Tamil News

சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் பிரச்சார களைப்பை போக்குவதற்காக ஓய்வெடுத்து வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மட்டும் தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் கடந்த 6 மாதங்களாக சட்டமன்றத் தேர்தலுக்காக களப்பணியாற்றி வந்தனர். இந்நிலையில் ஒரு வழியாக கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்து ஓட்டு எண்ணிக்கைக்காக பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

Bjp State President L. Murugan series tour after polling

சுட்டெரித்த கோடை வெயிலில் உடலை வறுத்தி பிரச்சாரம் செய்த தலைவர்களும், வேட்பாளர்களும், மே 2-ம் தேதி முடிவு வெளியாகும் என்பதால் இப்போது வீடுகளில் ஓய்விலிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், ஆந்திர மாநிலம் திருப்பதி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பங்கேற்றிருக்கிறார். அதோடு மதுரை சென்ற அவர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, நாகர்கோவில், தேனி என அடுத்தடுத்து தொடர் பயணம் மேற்கொண்டார்.

Bjp State President L. Murugan series tour after polling

நாகர்கோவிலில் பாஜக மகளிரணி நிர்வாகி ஒருவரின் கணவர் இறந்துபோனதால், அந்த நிர்வாகியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கையோடு தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கும் விசிட் அடித்திருக்கிறார் எல்.முருகன்.

கொரோனாவை காட்டி டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க முடியாது...நரேஷ் திகாயத் எச்சரிக்கை கொரோனாவை காட்டி டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க முடியாது...நரேஷ் திகாயத் எச்சரிக்கை

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் அண்மையில் மறைந்த நிலையில் துக்கம் விசாரிப்பதற்காக அங்கு சென்றார் எல்.முருகன். அப்போது தேர்தல் முடிவுகள், எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்தும் அங்கு மனம் விட்டு பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

English summary
Bjp State President L. Murugan series tour after polling60
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X