சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னண்ணே.. தொண்டர்களின் சாபம்தான் ஓட ஓட துரத்துதோ.. வைகோவுக்கு தமிழிசை கேள்வி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை:, "அண்ணன் வைகோ? அன்று உங்களுக்காக தீக்குளித்த தொண்டர்களின் சாபம்தான் கூட்டணிதோறும் ஓட ஓட விரட்டி துரத்துகிறதோ?" என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.

காலையில் இருந்து வைகோவை பாஜக தரப்பில் திட்டி தீர்த்து வருகிறார்கள். செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, விவசாயிகளை 5 நிமிஷம்கூட பிரதமர் மோடி சந்திக்க மறுக்கிறார் என்றார்.

மேலும் "விதவிதமாக டிரஸ் போடுவது, தினம் ஒரு நாட்டிற்கு போவது என்று 2 போதைகள் மோடிக்கு உள்ளன. இதில் இருந்து அவர் ஒரு காலமும் வெளியில் வரமுடியாது. அவரிடம் இருந்து பதவியையும், அதிகாரத்தையும் மக்கள் பறிக்க வேண்டும்" என்று வைகோ சொன்னதுதான் இதற்கு காரணம்.

குழப்பத்தில் வைகோ

குழப்பத்தில் வைகோ

வைகோ இப்படி பேசியது பற்றி முதல் ஆளாக போய் செய்தியாளர்கள் எச்.ராஜாவிடம் கருத்து கேட்டார்கள். அதற்கு எச்.ராஜா, "வைகோ குழப்பத்தில் இருக்கிறார். எல்லாம் தெரிந்த மாதிரி பேசிகிட்டு வருகிறார். நாகரீகமற்ற முறையில் மோடியின் உடையை விமர்சிக்கிறார். வைகோவை துரைமுருகனே கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவராகவே போய் திமுக வாசலில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்" என்றார்.

விமர்சனம்

இப்போது அடுத்ததாக தமிழிசை வைகோவை கடுமையாக விமர்சித்து கருத்து சொல்லியுள்ளார். இதனை தனது ட்விட்ரிலும் பதிவிட்டுள்ளார்.

ஆன்மா மன்னிக்காது

ஆன்மா மன்னிக்காது

அந்த பதிவில், "பாரதப் பிரதமர் மோடிஅவர்களை நிதானம் இழந்து தரம் தாழ்ந்து அரசியல் நாகரீகம் இல்லாமல் நாக்கில் நரம்பில்லாமல் நரச நடையில் ஒருமையில் விமர்சிக்கும் வைகோ அவர்களை தமிழக பாஜக கண்டிக்கிறது .கள்ளத்தோணி முதல் ஐயோ கொலைப்பழி போலி நாடகங்களால் தீக்குளித்த மதிமுக தொண்டர்கள் ஆன்மா உங்களை மன்னிக்காது" என்று தெரிவித்துள்ளார்.

சாபம்தான்

அதேபோல மற்றொரு ட்வீட்டில், "அண்ணன் வைகோ? அன்று உங்களுக்காக தீக்குளித்த தொண்டர்கள்? ஆன்மா? ஸ்டாலினை முதல்வராக்க உங்கள் சூளுரை கேட்டு சபிக்கிறதே? அவர்கள் சாபம்தான் கூட்டணிதோறும் ஓட ஓட விரட்டி துரத்துகிறதோ?" என்று கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.

English summary
BJP State President Tamizhisai Soundararajan slams MDMK Vaiko
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X