செந்தில் பாலாஜிக்கு கேட்டாங்களே.. நோட்டீஸ் வழங்காமல் எஸ்ஜி சூர்யா கைது ஏன்? நாராயணன் திருப்பதி கோபம்
சென்னை: செந்தில் பாலாஜி என்ன சாதாரணமானவரா? ஓடிப் போய் விடுவாரா? Crpc 141ஏ ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டதா? என்றெல்லாம் கேட்டவர்கள், எஸ்.ஜி சூர்யாவை விசாரணை செய்யாமல், சட்ட விரோதமாக கைது செய்தது ஏன்? என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக பதவி வகித்து வருபவர் எஸ்.ஜி சூர்யா. அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் எஸ்.ஜி சூர்யா ட்விட்டர், சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்படக்கூடியவர். தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், 'கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் எனவும் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த பாஜக நிர்வாகி எஸ்.ஜி சூர்யாவை, காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரை இரவோடு இரவாக மதுரைக்கு அழைத்துச் சென்றனர். எஸ்.ஜி சூர்யா கைதை அறிந்த பாஜகவினர் சென்னை எழும்பூரில் உள்ள காவல் ஆணையரகம் அலுவலகம் முன்பாக குவிந்தனர். எதற்காக அவரை கைது செய்தீர்கள்? யார் அவரை கைது செய்தார்கள் என்று கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட அவர்கள் கலைந்து சென்றனர். எஸ்.ஜி சூர்யா கைதுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் கொந்தளித்து வருகின்றனர்.
அந்த வகையில், பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ். ஜி. சூர்யா கைது செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கைது என்ற பெயரில் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக தெரிகிறது. செந்தில் பாலாஜி என்ன சாதாரமானவரா? ஓடிப் போய் விடுவாரா? Crpc 141ஏ ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டதா? என்றெல்லாம் கேட்டவர்கள், உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் படி சூர்யாவின் Crpc 141ஏ ன் கீழ் அறிவிக்கை அளித்து விசாரணை செய்யாமல், சட்ட விரோதமாக கைது செய்தது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை மனித நேயமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும் சட்ட விதிகளை உரிய முறையில் பின்பற்றாமல் கைது செய்ததாகவும் முதல்வர் மு.க ஸ்டாலின் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், செந்தில் பாலாஜி கைதுக்கு அத்தனை கேள்வி கேட்டவர்கள் எஸ்.ஜி சூர்யாவை நோட்டீஸ் வழங்காமல் கைது செய்தது ஏன் என்று நாரயணன் திருப்பதி விமர்சித்து இருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications