கழக முன்னோடிகளே வருக! பாஜக மேடையில் டங் ஸ்லிப்! பழக்கதோஷத்தால் பரிதவித்துப்போன வி.பி.துரைசாமி!
சென்னை: பாரதிய ஜனதா கட்சி மேடையில் 'கழக முன்னோடிகளே வருக' என அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பேசியது அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தது.
பழக்கதோஷத்தில் கழக முன்னோடிகளே எனக் கூறிய வி.பி.துரைசாமி, அடுத்த நொடியே சுதாரித்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டுவிட்டார்.
திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வி.பி.துரைசாமி
அதிமுகவில் துணை சபாநாயகர், திமுகவில் துணைப் பொதுச்செயலாளர், என திராவிட இயக்க அரசியல் கட்சிகளில் உயர்ந்த பொறுப்பில் இருந்தவர் வி.பி.துரைசாமி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் ராஜ்யசபா சீட் எதிர்பார்த்து கிடைக்காத அதிருப்தியில் இருந்த இவரை அப்போதைய பாஜக மாநிலத் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் ஸ்கெட்ச் போட்டு பாஜகவுக்கு அழைத்து வந்தார். திமுகவில் இருந்தவரை நாள் தவறாமல் கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயம் செல்லக்கூடியவர் வி.பி.துரைசாமி.

பிரஸ் மீட்
பாஜகவில் இணைந்த பிறகு அவருக்கு ஆரம்பத்தில் எந்த முக்கியப் பொறுப்பும் கொடுக்கப்படாததால் வீட்டிலேயே இருந்து வந்தார். இதையடுத்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் பதவியை வழங்கினார் எல்.முருகன். இதனால் உற்சாகமடைந்த இவர் கமலாலயம் பக்கம் தினமும் செல்லத் தொடங்கினார். ஆனாலும் அவர் எதிர்பார்த்த வரவேற்பு அங்கு கிடைக்காததால், அவ்வப்போது பிரஸ்மீட், ஆலோசனைக் கூட்டங்கள் என அண்ணாமலை கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆஜராகி வருகிறார்.

'கழக முன்னோடிகள்'
இந்நிலையில் மொழி விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து சென்னையில் பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய வி.பி.துரைசாமி, பழக்கதோஷத்தில் கழக முன்னோடிகளே வருக எனக் கூறினார். மேடையில் இருந்தவர்கள் உட்பட அனைவரும் ஒரு நொடி அதிர்ச்சி அடைந்த நிலையில், உடனடியாக சுதாரித்துக் கொண்டு அதற்கு மன்னிப்பும் கேட்டு பாஜக முன்னணித் தலைவர்களே என மாற்றிக் கொண்டார். டங் ஸ்லிப் ஆனதால் பரிதவித்துப் போனார் வி.பி.துரைசாமி.

திராவிட இயக்கங்கள்
ஒரு வருஷமா இரண்டு வருஷமா ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்க அரசியல் கட்சிகளில் பயணித்தவர் வி.பி.துரைசாமி. மேலும் இவரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications