எஸ்வி சேகரின் கெட்டு போன பால்.. டக்குன்னு எடப்பாடி பழனிசாமி எடுத்த ஆக்ஷன்: 2021 மறக்க முடியுமா?
எஸ்வி சேகர் வீட்டில் பால் பாக்கெட் கெட்டுபோன சம்பவம், மறக்க முடியாத ஒன்றாகும்
சென்னை: இந்த வருடம் எத்தனையோ நிகழ்வுகள் அரசியலில் நடந்திருந்தாலும் ஒருசில சம்பவங்கள் மட்டும் மக்களிடையே மறையாமல் நீடித்து வருகிறது.. அந்த வகையில் எஸ்வி சேகர் வீட்டில் பால் கெட்டு போன விவகாரம் தமிழகமெங்கும் பல விவாதங்களை ஏற்படுத்தி விட்டது.
கடந்த ஏப்ரல் 26-ம் தேதி இந்த சம்பவம் நடந்தது.. அன்றைய தினம், எஸ்வி சேகர் தன்னுடைய வீட்டுக்கு வாங்கின பால் பாக்கெட் கெட்டு போய்விட்டது.. அதனால், பால் கெட்டுப் போனதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் எஸ்வி சேகர் புகார் செய்திருந்தார்.
உடனே அந்த பால் பாக்கெட் மாற்றி தரப்பட்டது.. 'பதிவு பண்ணிய 3 மணி நேரத்துக்குள் 9 புதிய double toned பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகத்திலிருந்து ஒரு அதிகாரி வீட்டிற்கு வந்து மாற்றிக்கொடுத்து சென்றார்.. தங்களுக்கு நன்றி" என்று எஸ்வி சேகரும் மாஜி முதல்வருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டிருந்தார்.

ட்விட்டர்
எஸ்வி சேகர் இப்படி ட்வீட் போட்ட பிறகுதான், அவர் வீட்டில் பால் கெட்டு போன விஷயமே அனைவருக்கும் தெரியவந்தது.. அந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமியும் ட்விட்டரில் பொதுமக்களிடம் நெருங்கி வந்து கொண்டிருந்தார்... பொதுமக்கள் பலரும், தங்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் ட்வீட்டில் தெரிவிக்க, அதன் பேரில் எடப்பாடியாரும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வந்த சமயம் அது.

எடப்பாடி பழனிசாமி
இத்தனைக்கும் கொரானா தடுப்பு நடவடிக்கைகளை எடப்பாடி அரசு தீவிரமாக கையில் எடுத்திருந்த நேரமும்கூட.. மிக முக்கியமான கோரிக்கை, புகார்களை முதல்வரே நேரடியாக தலையிட்டு, கவனித்து, அதிரடிகளை காட்டி வந்தநிலையில்தான், பாஜக ஆதரவாளரும், நடிகருமான எஸ்வி சேகரும் தன் தரப்பில் ஒரு புகாரை எடப்பாடி பழனிசாமிக்கு கொண்டு போயிருந்தார்.. இது தொடர்பாக முதலில் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

பால் குக்கர்
"இன்று காலை வாங்கிய ஆவின் பால் 13 பாக்கெட்டுகளில் 9 பாக்கெட்டுகள் பால் குக்கரில் காச்சும் போது திரிந்து விட்டது. வீட்டில் 90 வயது தாயார் 7 வயது 2 வயது குழந்தைகள் உள்ளது. நான் என்ன செய்வது' என்று கேள்வி எழுப்பி இருந்தார்... பிறகு இன்னொரு ட்வீட்டை பதிவிட்டு அதை முதல்வருக்கு டேக் செய்து, "நான் தங்களுக்கு பதிவு பண்ணிய 3 மணி நேரத்துக்குள் 9 புதிய double toned பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகத்திலிருந்து ஒரு அதிகாரி வீட்டிற்கு வந்து மாற்றிக்கொடுத்து சென்றார். தங்களுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்' என்று கூறியிருந்தார்.

விமர்சனங்கள்
இந்த ட்வீட்களை பார்த்துதான் ட்விட்டர்வாசிகள் கொந்தளித்துவிட்டனர்.. சிலர் வரவேற்றனர்.. சிலர் கிண்டலடித்தனர்.. கொரோனா நேரத்தில் மக்களின் உயிரை காக்க வேண்டிய ஆயிரக்கணக்கான வேலைகள் ஒரு மாநில முதல்வருக்கு இருக்கும்போது, எஸ்வி சேகருக்கு பால் பாக்கெட்டுக்கள் மாற்றி கொடுப்பதில் அரசு ஏன் கவனம் செலுத்துகிறது? என்று கண்டனங்களை ட்விட்டர்வாசிகள் கேள்விகளாக பதிவிட்டனர்.

கிண்டல்
அதில் ஒருவர், "என் வீட்டில் 2 பாக்கெட் ஆவின்பால் கெட்டு போய் விட்டது. ஏஜெண்ட் உங்களது தவறுக்கு பொறுப்பேற்க முடியாது என்று சொல்லி விட்டார். எனக்கும் @CMOTamilNadu விடம் சொல்லி வேறு பாக்கெட் வாங்கி தர இயலுமா? நான் பென்ஷனில் வாழ்க்கை நடத்தறவன்" என்று கிண்டலாக கேட்டிருந்தார்.. "இதுக்கு எல்லாம் முதலமைச்சரிடம் புகார் செய்வதா? ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு இதுதான் வேலையா? என்று பலரும் எஸ்வி சேகரிடமே கேள்வி எழுப்பியிருந்தனர். ஒருவழியாக இந்த விவகாரம் முடிந்துவிட்டாலும், எஸ்வி சேகர் வீட்டில் பால் பாக்கெட் கெட்டு போன சம்பவம் இணையத்தில் ஒரு ரவுண்டு வந்துவிட்டது...!
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications