திமுக Vs பாஜகவா? அப்போ ஈரோடு கிழக்கில் அண்ணாமலை களமாடியிருக்கணுமே? ஏன் மறுத்தார்? கு.ப.கிருஷ்ணன்
சென்னை: திமுக வெர்சஸ் பாஜக என்றால் ஈரோடு இடைத்தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை களமாடியிருக்கலாமே என ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் ஒரு தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், இரட்டை இலை விவகாரத்தில் நாங்கள் என்ன எதிர்பார்த்தோமோ அதை உச்சநீதிமன்றம் கொடுத்துள்ளது. அவர்கள் அணி, இவர்கள் அணி என இல்லாமல் எம்ஜிஆர் கொண்டு வந்த இரட்டை இலையும் ஜெயலலிதா கட்டிக் காத்த இரட்டை இலையும் பறிபோய்விட கூடாது என்பது எங்கள் விருப்பம்.
இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே முடிசூட்டி கொண்டார். ஒரு கட்சியின் தலைமைதான் ஒரு வேட்பாளரை தேர்வு செய்து அதற்கான படிவம் அ, ஆ ஆகியவற்றில் கையெழுத்திட்டு தருவார்கள். 99 சதவீதம் பேர் பொதுக் குழுவில் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக உள்ளனர்.

எம்ஜிஆர்
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அப்போது பொதுக் குழு உறுப்பினர்களுக்கு செலவுக்கு பணம் கொடுத்து முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வாக்களிக்குமாறு கூறினார். ஆனால் அதே பொதுக் குழு ஒரு கட்டத்தில் எம்ஜிஆரை கட்சியிலிருந்தே நீக்கினர். இதையடுத்துதான் அடிப்படை தொண்டர்கள்தான் கட்சியின் தலைமையை தேர்வு செய்ய வேண்டும் என்ற ஒரு விதியை வகுத்தார்.

எடப்பாடி பழனிசாமி
ஒவ்வொரு முறையும் எடப்பாடி பழனிசாமியை நான் பார்க்கும் போதெல்லாம் கூறுவேன், அண்ணே வேண்டாம்ணே, இரட்டை இலை முடங்குவதற்கு நீங்கள் காரணமாகிவிடாதீர் என்றேன். அப்போது முன்னாள் அமைச்சர் செம்மலை சொன்னார், விவாகரத்து ஆகிவிட்டது. இனி குடும்பம் நடத்த முடியாது என்றார். அதற்கு நான் சொன்னேன், எத்தனையோ பேர் விவாகரத்து ஆனவர்கள் மகன், மகள் திருமணத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளார்கள். ஏன் கூடி இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா என கேட்டேன். ஆனால் இன்று எப்படியோ இரட்டை இலை கட்டி காப்பாற்றப்பட்டாகிவிட்டது.

இடைக்கால பொதுச் செயலாளர்
இனி இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி தன்னை தானே கூறிக் கொள்ள முடியாது. இரட்டை இலை வெற்றிக்காக ஓபிஎஸ், அவருடன் இருக்கும் நிர்வாகிகள், அவரது தொண்டர்கள், தொகுதி மக்கள் என அனைவருமே பாடுபடுவார்கள். இரட்டை இலை சின்னத்துக்காக ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ய போவார். இரட்டை இலை சின்னத்திற்காக சசிகலாவுக்கு எங்களுடன் துணை நிற்கட்டுமே.

தாமரை சின்னம்
தாமரை சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடட்டும் என பாஜக சொல்லவே இல்லை, நாங்களும் சொல்லவே இல்லை. அதிமுகதான் பாமகவுக்கு அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தது. அது போல் மதிமுகவுக்கு அங்கீகாரம் பெற்று தந்தது. பல கட்சிகள் வளர்வதற்கு மரமாக, நிழலாக, நீராக இருந்த கட்சி அதிமுக. பாஜக மட்டுமில்லை எந்த கட்சியும் சொல்வதை கேட்கும் நிலையில் நாங்கள் இல்லை.

இரு வீட்டுக்கு இடையே சண்டை
இரு வீட்டுக்கு இடையே சண்டை வந்தால் பக்கத்து வீட்டுக்காரர் மத்தியஸ்தம் செய்ய வருவார். அது போல்தான் எங்கள் இரு அணிகளுக்கு இடையே சண்டை வந்த போது பாஜக மத்தியஸ்தம் செய்ய வந்தது. ஆனால் நீங்கள் கேட்பது போல் பாஜகவில் பிரச்சினை என்றால் நாங்கள் நாகரீகமாக இருந்து கொள்வோம். தமிழ்நாடு திராவிட பூமி. பாஜக எங்களை கட்டுப்படுத்த முடியாது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியால் இந்தியாவை உலக நாடுகளே திரும்பி பார்க்கின்றன. அவரை நாங்கள் மதிக்கிறோம். அதற்காக எங்களை ஏறி மிதிக்க அனுமதிக்க மாட்டோம்.

திமுக வெர்சஸ் பாஜக
திமுக வெர்சஸ் பாஜக என சொல்லிக் கொண்டால் போதுமா, அண்ணாமலை களமாடி பார்த்திருக்க வேண்டும். அவர்தான் மாட்டேன் என கூறிவிட்டாரே. தேசிய அளவில் காங்கிரஸ் வெர்சஸ் பாஜக என இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அக்கட்சியை எதிர்த்து பாஜக போட்டியிட்டு வென்றிருந்தால் அது நாடாளுமன்றத் தேர்தலுக்கு உதவியாக இருந்திருக்கும். பிரதமர் மோடியையும் ஜே பி நட்டாவையும் மதிக்கிறோம். அதற்காக நாங்கள் அண்ணாமலைக்கு அடிமைகள் அல்ல. இவ்வாறு கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார்.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications