ஒரே மாசத்தில் பதவி.. ”அண்ணாமலையாருக்கு நன்றி” பாஜக மாநில ஓபிசி பொதுச்செயலாளராக திருச்சி சிவா மகன்
சென்னை: கடந்த மாதம் பாஜகவில் சேர்ந்த திருச்சி சிவா மகன் சூர்யா சிவா பாஜக மாநில ஓபிசி பிரிவு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா கடந்த மே 8 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த அவர் கட்சியில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையையும் பெற்றுக் கொண்டார்.

திமுக குடும்ப கட்சி
பாஜகவில் இணைந்த பின்னர், திமுகவை குடும்ப கட்சி என்று சாடிய சூர்யா சிவா, ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்குப் பதில் பாஜகவில் இணைந்து மக்களுக்காகச் சேவை செய்ய விரும்புகிறேன் என்று கூறினார். திமுகவிலிருந்து விலகு பாஜகவில் இணைந்தது குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டியளித்த சூர்யா சிவா பல்வேறு தகவல்களை பகிர்ந்திருந்தார்.

பாஜகவுக்கு சென்றது ஏன்?
ஆளும்கட்சியாக வந்த பிறகும் பொறுத்திருக்குமாறு சொல்வது சரியாக படாததால் பாஜகவுக்கு சென்றுவிட்டேன் என சூர்யா சிவா விளக்கம் அளித்தார். பாஜகவில் தான் பதவியை கேட்கவில்லை என்றும், அவர்களும் எனக்கு எந்த உறுதிமொழியையும் தரவில்லை என்று தெரிவித்த சூர்யா, கட்சியின் தலைமையிடம் பேசிய பிறகு நல்லதொரு அறிவிப்பை வெளியிடுவதாக அண்ணாமலை கூறியிருப்பதாக தெரிவித்தார்.

பரபரப்பு ட்வீட்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் பதிவு ஒன்றை சூர்யா சிவா வெளியிட்டுள்ளார். அதில், "24 மணி நேரத்தில் என்னை கைது செய்ய இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன். பொய் வழக்குகளை போடுவது திமுகவுக்கு பெரிய விசயம் அல்ல. எதையும் சந்திக்க கூடிய மன நிலையில் தான் நான் இருக்கிறேன் வாருங்கள் வருக. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நாட்கள் எண்ணப்படுகின்றன. எங்கள் தலைவர் உங்கள் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டு வரலாற்று சிறப்புமிக்க நாளை ஏற்படுத்துவார்." என பதிவிட்டு இருந்தார்.
Recommended Video

ஒரே மாசத்தில் பதவி
இதனிடையே இன்று பாஜக மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் அணிக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதில், திருச்சி சிவா மகன் சூர்யா அந்த அணியின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "OBC அணியின் மாநில பொதுச் செயலாளராக என்னை நியமனம் செய்த அஞ்சாநெஞ்சன் அன்புக்குரிய அண்ணன் அண்ணாமலையார் அவர்களுக்கு எனது நன்றிகள்.கண்டிப்பாக உங்கள் பெயருக்கும் கட்சிக்கு மென்மேலும் பெருமை சேர்ப்பேன்"
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications