இந்தியாவிற்கு இணைப்பு மொழி? ”தமிழுக்கு குவாலிட்டி இருக்கு, குவாண்டிட்டி இல்லை”.. பாஜக அண்ணமலை பரபர.!

Subscribe to Oneindia Tamil

சென்னை : இந்தியாவின் இணைப்பு மொழியாவதற்கான குவாலிட்டி (தரம்) தமிழுக்கு இருந்தாலும் , quantity (பேசுவோர் எண்ணிக்கை) தமிழுக்கு இல்லை எனவும், இந்தித் திணிப்பை தமிழக பாஜக எந்தவிதத்திலும் ஏற்காது , இந்தியை திணிக்க முயற்சித்தால் பாஜக எதிர்க்கும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேச வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா கூறியது இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பினை பெற்றது

தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர், திரை பிரபலங்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி என பேசினார்.

தமிழ் இணைப்பு மொழி

தமிழ் இணைப்பு மொழி

இதனையடுத்து தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்த விவகாரம் பேசப்பட்ட நிலையில், இந்தியாவின் இணைப்பு மொழியாவதற்கான குவாலிட்டி (தரம்) தமிழுக்கு இருந்தாலும் , quantity (பேசுவோர் எண்ணிக்கை) தமிழுக்கு இல்லை எனவும், இந்தித் திணிப்பை தமிழக பாஜக எந்தவிதத்திலும் ஏற்காது , இந்தியை திணிக்க முயற்சித்தால் பாஜக எதிர்க்கும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்ளிடம் பேசிய அவர், " இந்தித் திணிப்பை எதிர்ப்பதில் தமிழக பாஜக தெளிவாக இருக்கிறது.. இந்தியை திணிக்க முயற்சித்தால் தமிழக பாஜக எதிர்க்கும் . இந்தி திணிப்பு முயற்சியை எந்தவிதத்திலும் தமிழக பாஜக ஏற்காது .

புதிய கல்வி கொள்கை

புதிய கல்வி கொள்கை

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய கல்வி கொள்கையில் இந்தி விருப்ப பாடமாகவே இருக்கிறது. இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருந்தால் நாங்கள் உச்சகட்ட பெருமை அடைவோம். அந்த நிலையை கொண்டுவர ஏதாவது முயற்சி எடுத்துள்ளனரா? கடந்த 10 ஆண்டு முன்பு தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதிய 12ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது தமிழ் வழியில் தேர்வு எழுதிய 12ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 3.70 லட்சமாக குறைந்துள்ளது

நான் இந்தி பேசமாட்டேன்

நான் இந்தி பேசமாட்டேன்

அனைத்து மாநிலங்களிலும் குறைந்தது 10 தமிழ் பள்ளிகளை , தமிழக அரசின் செலவில் நடத்த முதல்வர் முயற்சி எடுக்க வேண்டும். மும்மொழிக் கொள்கைக்கு எதிராக போராடிய தமிழ் ஆர்வலர் கி.ஆ.பெ .விசுவநாதன் தனது இறுதி காலத்தில் வருந்தினார். நான் இந்தி பேசமாட்டேன். ஏ.ஆர். ரகுமான் ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசியது அனைவருக்கும் பெருமை. தமிழ் இந்தியாவின் இணைப்பு மொழியாக வேண்டும் என்று கூற அவருக்கு கருத்து சுதந்திரம் உள்ளது. இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி இந்திதான். தொன்மை முதுமை , பழைமை என இந்தியாவின் இணைப்பு மொழியாவதற்கான quality தமிழுக்கு இருக்கிறது , ஆனால் quantity இல்லை , அதாவது அதிகமானோர் பேசவில்லை.

Recommended Video

    கொட்டித்தீர்த்த AR Rahman | South India | Hindi Imposition | Oneindia Tamil
    குவாண்டிட்டி இல்லை

    குவாண்டிட்டி இல்லை


    அதிகமானோரை பேச வைக்க என்ன முயற்சி எடுக்கப்பட்டுள்ளது ". தாய்மொழி தமிழ்தான் நமக்கு பெருமை, இந்தியால் நமக்கு பெருமையில்லை . அந்நிய மொழியான ஆங்கிலமும் , இந்தியும் ஒன்றுதான் எனக்கு. கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் ஆசிரியர்களை குறைப்பது மத்திய அரசின் நோக்கமல்ல. அதிகாரபூர்வமாக இந்தியாவின் இரண்டாவது மொழியாக இருந்த இந்தியை , 2019ல் விருப்ப மொழியாக்கியது பாஜகதான். என பேசினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+