பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலைக்கு.. கொரோனா வைரஸ் தொற்று.. மருத்துவமனையில் அனுமதி
சென்னை: பாஜக மாநிலத் துணைத் தலைவரும் அரவக்குறிச்சி வேட்பாளருமான அண்ணாமலைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த வாரம் தான் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் களத்தில் அமைதி திரும்புவதற்குள் மறுபுறம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாகத் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. பேருந்து பயணங்களில் கட்டுப்பாடு வெளிநாட்டுப் பயணிகளுக்கு இபாஸ், திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் எனப் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று அமலுக்கு வந்தது.
இந்நிலையில், பாஜக மாநிலத் துணைத் தலைவரும் அரவக்குறிச்சி வேட்பாளருமான அண்ணாமலைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் மற்றும் துரை முருகனின் சகோதரர் துரை சிங்காரம் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications