"நாங்கதான் பெரிய கட்சி".. பாஜகவிடம் கெத்து காட்டும் தமாகா?.. ஜி.கே.வாசன் கேட்கும் தொகுதிகள் எத்தனை?
சென்னை: பாஜக- தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முதற்கட்டமாக நடந்துள்ளது.
மூப்பனாரால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு பின்னர் அவராலேயே காங்கிரஸுடன் ஐக்கியமாக்கப்பட்டது. இந்த நிலையில் அவருடைய மறைவுக்கு பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஜி.கே.வாசன் தொடங்கினார்.

அடுத்தடுத்த தேர்தல்களில் போட்டியிட்ட நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தது. அந்த தேர்தலில் தமாகா சார்பில் என்.ஆர். நடராஜன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து ஜி.கே. வாசனுக்கு மாநிலங்களவை எம்பி பதவியை பாஜக கொடுத்தது.
அதிமுகவுடன் கூட்டணியா?: கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தமாகா மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்தது. தற்போது 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது.
தமாகா பாஜக கூட்டணி: இந்த நிலையில் தமாகா பாஜக கூட்டணியில் இணைவதாக கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பாஜக பொதுக் கூட்டத்திலும் கூட்டணி கட்சி என்ற முறையில் ஜி.கே.வாசன் கலந்து கொண்டிருந்தார்.
ஜி.கே.வாசன் கட்சி: இந்த நிலையில் பாஜக- தமாகா இடையே முதல் கட்டமாக இன்றைய தினம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்தது. ஜி.கே.வாசனின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
4+1 கேட்கிறதா தமாகா: இந்த பேச்சுவார்த்தையின் போது பாஜகவிடம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 4 மக்களவைத் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை தொகுதியையும் கொடுக்க வேண்டும் என ஜி.கே. வாசன் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சுமூகம் எட்டப்படவில்லை என்பதால் மார்ச் 4 ஆம் தேதி மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதிலாவது வாசனின் கோரிக்கை நிறைவேறுமா என தெரியவில்லை.
டெல்டா மாவட்டங்கள்: பாஜக கூட்டணியில் தற்போது இருக்கும் கட்சியில் பெரிய கட்சி என பார்த்தால் அது ஜி.கே.வாசனுடையதுதான். அக்கட்சிக்கு தமிழகம் முழுவதும் செல்வாக்கு இல்லாவிட்டாலும் டெல்டா மாவட்டங்களில் பட்டுக்கோட்டை, தஞ்சை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது.
தாமரை சின்னமா சைக்கிள் சின்னமா: எல்லாவற்றுக்கும் மேல் மூப்பனார் கட்சி என்ற ஒரு பிராண்டும் இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு பாஜக அக்கட்சிக்கு 4+1 இடங்களை ஒதுக்க நினைத்தால் ஒதுக்கலாம். மேலும் ஜி.கே. வாசன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட விரும்புகிறார். ஆனால் பாஜகவோ அவரை தாமரை சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கலாம். இல்லாவிட்டால் 4 தொகுதிகளில் இரு தொகுதிகளில் தாமரை சின்னத்திலும் 2 தொகுதிகளில் சைக்கிள் சின்னத்திலும் போட்டியிட கட்டாயப்படுத்தலாம். அப்போதுதான் தாமரை சின்னத்தில் தமாகா வெல்லும் போது அதையும் கருத்தில் கொண்டு மாநிலங்களவை ஒதுக்கப்படும் என்றும் பாஜக அறிவுறுத்தலாம்.
அதிமுக கூட்டணி: அதே வேளையில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் அதிமுக கூட்டணியில் இணையாமல் தங்களுக்கு இத்தனை தொகுதிகளை வேண்டும் என கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் தொகுதிகளை பேசுவதற்கு முன்பே தங்கள் கட்சி பாஜக கூட்டணியில் இணைந்து செயல்படும் என அறிவித்துவிட்டு தற்போது ஜி.கே. வாசன் பேரம் பேசுவது ஏற்புடையதாக இல்லை என்றே தெரிகிறது. பேரம் பேசியும் பாஜக கொடுக்காவிட்டால் தமாகா அதிமுக கூட்டணி செல்லவும் முடியாது.
எத்தனை தொகுதிகள்: ஏற்கெனவே முக்கிய நிர்வாகியான அசோகன் தமாகாவிலிருந்து விலகிவிட்டார். இன்னும் சிலர் பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி என சொல்லப்படுகிறது. இதனால் கூட்டணி பேரம் முடிவதற்குள் எத்தனை பேர் அக்கட்சியிலிருந்து வெளியேறுவார்கள் என தெரியவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டே பாஜக சொற்ப இடங்களை ஒதுக்கும் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே 4+1 என்ற நிலையிலேயே தமாகா அடம் பிடிக்க போகிறதா இல்லை கிடைத்தவரை லாபம் என மாநிலங்களவை உறுப்பினர் பதவியுடன் கிடைக்கும் 1 அல்லது 2 மக்களவை தொகுதிகளை பெற்றுக் கொள்ளுமா என தெரியவில்லை.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications