ஆமா நான் அப்படித்தான்.. ஆனால் கீழ்த்தரமாக பேசும் அளவுக்கு கிடையாது.. தமிழிசையின் செருப்படி பதில்
நான் கருப்பு நிறம்தான்.. அதைபற்றி கவலைப்படவில்லை என தமிழிசை பதில் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: "ஆமா நான் கருப்புதான்.. ஆனால் யாரும் கீழ்த்தரமாக பேசும் அளவுக்கு நான் கிடையாது" என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் தமிழிசை சவுந்தராஜன்!
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர்! சின்ன குழந்தையில் இருந்தே அரசியல் தலைவர்களை பார்த்து பார்த்து வளர்ந்தவர்!
பெரியவர்களிடம் எப்படி கண்ணியத்துடன், மரியாதையுடன் நடக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினரால் வழிநடத்தப்பட்டவர். குமரியார் மகளிடம் நாகரீக பேச்சு எப்போதுமே இருக்கும் என்று கருணாநிதியே சொல்லும் அளவுக்கு தன்னை பக்குவப்படுத்தி கொண்டவர்.

தனிநபர் தாக்குதல்
கனடா, ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்று, கருவில் இருக்கும் குழந்தைக்கு குறைபாடுகள் இருந்தால், அதனை எப்படி கருவிலே சரி செய்வது என்ற படிப்பினை படித்தவர். ஆனால் இதெல்லாம் தெரியாமல் அவர் மீது தனிநபர் தாக்குதல்கள் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து நடத்தப்படுகிறது!
|
சொல்லடி தாக்குதல்
அவர் சார்ந்துள்ள கட்சிக்காக ஒருவரின் நிறத்தை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அநாகரீகம் என்றுகூட சிலர் தொடர்ந்து அவர்மீது சொல்லடி தாக்குதல் அரங்கேறுகிறது. இது பற்றி அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட, அதற்கு தமிழிசையே ஒரு பதிலையும் அளித்து வீடியோ பதிவிட்டுள்ளார். "உங்கள் நிறம் குறித்து கேலி செய்பவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" இதுதான் கேள்வி. இதற்கு தமிழிசை அளித்துள்ள பதில் என்ன தெரியுமா?

மீம்ஸ்கள்
"கருப்பாக இருக்கிறேன் என்று என்னை கிண்டல் செய்கிறார்கள். மீம்ஸ் போடுகிறார்கள். ஆனால் நான் பெருமைப்படறேன். நிறத்தை பற்றியோ எனது குணத்தை பற்றியோ யாரும் கீழ்த்தரமாக பேசும் அளவுக்கு நான் இல்லை.

எளிமை
என்றுமே நான் நேர்மறையான சிந்தனை கொண்டு, முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறேன். அரசியலில் ஊழலற்ற தன்மை, நேர்மை, சத்தியம், எளிமை இவைதான் எனது வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

தன்னம்பிக்கை
கருப்பு நிறத்தை பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனெனில், இந்த செம்மண்ணின் நிறம் கருப்பு.. பனங்காட்டின் நிறம் கருப்பு, தென்னகத்தின் நிறம் கருப்பு.. உங்களுக்காக விருப்பமுடன் செயலாற்ற நினைக்கிறேன். அதனால் என்னை பற்றி கேலி கிண்டல் செய்பவர்களை புறந்தள்ளிவிட்டு, தன்னம்பிக்கையுடன் செயல்பட விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்!

வெளிநாட்டுக்காரர்கள்
உண்மையிலேயே தமிழிசை சொன்ன "ஊழலற்ற தன்மை, நேர்மை, சத்தியம், எளிமை" இந்த நான்கையும் யாராலும் எப்போதும் குறையே சொல்ல முடியாதுதான்! இன்னொரு முக்கியமான விஷயம்... நம்ம ஊர்லதான் இந்த கருப்பு, வெள்ளை என்ற நிற பாகுபாடு எல்லாம். வெளிநாட்டுக்காரங்களை பொறுத்தவரை இந்தியாவில இருக்கிற நாம் எல்லோருமே அவங்க பார்வைக்கு "அட்ட கருப்புதான்"
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications