யாருப்பா அந்த 25 பேர்.. எனக்கே பாக்கணும் போல் இருக்கு.. தட்டி கொடுத்து வாழ்த்திய தமிழிசை!
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்
Recommended Video
சென்னை: நாடெங்கும் மோடி அலை வேகமாக வீசி வரும்நிலையில், தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்திலும் பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை நடந்துள்ளது.
மோடி பிரதமராக வந்த பிறகு மிஸ்ட் கால் கொடுத்து உறுப்பினராகும் முறை அமல்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் இருப்பதாக சொல்லப்பட்டு, அதன்படியே உறுப்பினர்களும் நிறைய சேர்ந்தார்கள். என்னதான் உறுப்பினர்கள் அதிகமாக இணைந்தாலும் மிஸ்டு கால் கட்சி என்ற பெயரை பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில் திரும்பவும், பாஜகவில் மிக தீவிரமான உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. பாஜகவின் நிறுவனர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளையொட்டி பாஜக சார்பில் இந்த உறுப்பினர்கள் சேர்க்கை நடக்கிறது. இதற்காக முகாம்களும் நடத்தப்படுகின்றன. இதில் அந்தந்த பகுதி பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு, உறுப்பினர் சேர்க்கையை முன்னின்று நடத்துகின்றனர்.
அந்த வகையில், நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடந்துள்ளது. மொத்தம் 25 பேர்தான் உறுப்பினர்கள். இவர்கள் எம்எஸ் மணியன் என்பவர் தலைமையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் முன்னிலையில் இணைந்துள்ளார்கள்.
நாமக்கல் மாவட்ட பிரச்சாரப்பிரிவு தலைவர் சகோதரர் திரு.MS.மணியன் அவர்கள் ஒரே நாளில் 25 உறுப்பினர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்திருக்கிறார். சகோதரர் திரு.MS.மணியன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்...பாராட்டுக்களும்...@ChouhanShivraj @BJP4India @BJP4TamilNadu pic.twitter.com/gc8xVphuqO
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) July 9, 2019
25 பேர் உறுப்பினர் சேர்க்கைக்கு காரணமான மணியனுடன் இணைந்து ஒரு போட்டோவும் எடுத்து, அதை ட்வீட்டிலும் போட்டுள்ளார் தமிழிசை. அதில், "நாமக்கல் மாவட்ட பிரச்சாரப்பிரிவு தலைவர் சகோதரர் திரு.MS.மணியன் அவர்கள் ஒரே நாளில் 25 உறுப்பினர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்திருக்கிறார். சகோதரர் திரு.MS.மணியன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்...பாராட்டுக்களும்..." என்று பதிவிட்டுள்ளார்.
தமிழிசையின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் கமெண்ட்களை போட்டு வருகிறார்கள். "#MS மணியன்;அவருடைய மனைவி; மகன்; மகள்; அப்பா; அம்மா; மாமனார்; மாமியார்; மச்சினன்; கொழுந்தியார்;மைனியார்;பெரியப்பா; பெரியம்மா; சித்தப்பா; சித்தி; தாத்தா; பாட்டி; அண்ணன்; தம்பி; மருமகன்; மருமகள்; பேரன்; பேத்தி; மச்சினன் மனைவி; கொழுந்தியா கணவன்..ஆக மொத்தம் 25 😂😂" என்று பதிவிட்டுள்ளார்.
#MS மணியன்;அவருடைய மனைவி; மகன்; மகள்; அப்பா; அம்மா; மாமனார்; மாமியார்; மச்சினன்; கொழுந்தியார்;மைனியார்;பெரியப்பா; பெரியம்மா; சித்தப்பா; சித்தி; தாத்தா; பாட்டி; அண்ணன்; தம்பி; மருமகன்; மருமகள்; பேரன்; பேத்தி; மச்சினன் மனைவி; கொழுந்தியா கணவன்..ஆக மொத்தம் 25 😂😂
— RAVI @ பகல்நிலவு (@Ravi37138742) July 9, 2019
"இந்த 5 ரூபாயை ஐந்தாயிரமாக நினைத்துகொண்டு அண்ணனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் (எங்க ஊரு கரகாட்டத்துல சொல்லுவாங்க)" என்று ஒரு ட்வீட்டும், "யாருப்பா அந்த 25 பேர் எனக்கே பாக்கனும் போல் இருக்கு" என்று மற்றொரு ட்வீட்டும் தெறித்து விழுகிறது.
இந்த 5 ரூபாயை அய்யாயிறமாக நினைத்துகொண்டு அண்ணனுனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் (எங்க ஊரு கரகாட்டத்துலெ சொல்லுவாங்க)
— தென் மாவட்ட கிராமத்தான் (@anand_anirud) July 9, 2019
Tamilisai mind voice: யாருப அந்த 25 பேர் எனக்கே பாக்கனும் போல் இருக்கு pic.twitter.com/icY4C8C1Ga
— இன்ப குமார் (@RHbDU5CM0kNCkPb) July 10, 2019
ஒரு தேசிய அளவிலான கட்சிக்கு தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் ஒரு ஊரில் ஒரே நாளில் 25 பேர் இணைந்துள்ளது ஆச்சரியம்தான். ஆனால் 25 பேரே என்றாலும் அவர்களுக்கு மதிப்பு தந்து, இதனை ட்வீட்டிலும் போட்டு கவுரவப்படுத்தியதற்காக தமிழிசையை பாராட்டவே செய்யலாம்.
-
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்











Click it and Unblock the Notifications