இந்த 10 இடத்தை விடக்கூடாது.. அடித்து சொன்ன அமித் ஷா! மேஜையில் கிடந்த லிஸ்ட்.. சட்டென பார்த்த அதிமுக
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக 10 எம்பி இடங்களில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற தீர்மானத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெறும் பட்சத்தில் இந்த 10 இடங்களில் கண்டிப்பாக போட்டியிட்டே ஆக வேண்டும் என்ற திட்டத்தில் அந்த கட்சி இருக்கிறதாம்.
உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா சமீபத்தில் தமிழ்நாடு வந்து இருந்தார். தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் வந்து இருந்தாலும், தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளை சந்தித்து முக்கியமான சில விஷயங்களை ஆலோசனை செய்வதாகவும் திட்டம் போடப்பட்டு இருந்தது.
அமித் ஷா கடந்த சில வாரங்களுக்கு முன்பே கேரளா வந்த போது தமிழ்நாடு வருவதாக இருந்தது. கோயம்புத்தூரில் அவர் மீட்டிங் நடத்துவதாக இருந்தது.
ஆனால் அந்த பயணம் கடைசியில் ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்தே அவர் தற்போது சென்னைக்கு வந்து இருக்கிறார்.

சென்னை
இந்த நிலையில்தான் சென்னையில் சனிக்கிழமை நடந்த மீட்டிங்கில் அமித் ஷா முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறார் என்று கமலாலய தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன. அதன்படி கடந்த மீட்டிங்கில் பேசுகையில், தமிழ்நாட்டில் என்ன மாதிரியான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்வோம். டெல்லி இதில் ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டது. எங்களுக்கு தமிழ்நாடு கள நிலவரம் தெரியும்.

கள நிலவரம்
யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றிபெற முடியும் என்பது எங்களுக்கு தெரியும். நீங்கள் கூட்டணியை பற்றி கவலைப்பட வேண்டாம். நாங்கள் அதில் முடிவு எடுத்துக்கொள்வோம். நீங்கள் கூட்டணி குறித்து வெளியே பேட்டி கொடுக்க வேண்டாம். 15 இடங்களுக்கும் அதிகமாக தமிழ்நாட்டில் நாம் போட்டியிடுவோம். இதில் 10 இடங்களிலாவது பாஜக வெற்றிபெற்றாக வேண்டும் என்று 2024 லோக்சபா தேர்தல் குறித்து அமித் ஷா அந்த மீட்டிங்கில் பேசியதாக கூறப்படுகிறது. இதில்தான் அவர் லிஸ்ட் ஒன்றையும் நீட்டி இருக்கிறார்.

லிஸ்ட்
அமித் ஷா பேசும் மேடையில் அந்த லிஸ்ட் இருந்து இருக்கிறது.கொங்கு மண்டலத்தில் கோவை உட்பட 4 தொகுதிகள், தென் மண்டலத்தில் கன்னியாகுமரி உட்பட 3 தொகுதிகள், சென்னையில் 1 தொகுதி, டெல்டாவில் 2 தொகுதிகள் என்று 10 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று டெல்லி பாஜக தமிழ்நாடு பாஜகவிடம் உத்தரவிட்டு இருக்கிறதாம். இந்த இடங்களை கூட்டணி கட்சியிடம் இருந்து வாங்குவதை பற்றி கவலைப்பட வேண்டாம்.

கூட்டணி
கூட்டணி இடத்தை நாங்கள் எளிதாக வாங்கி விடுவோம். நீங்கள் களப்பணி மீது மட்டும் கவனம் செலுத்துங்கள். இங்கே தேர்தல் பணிகளை தொடங்குங்கள். இன்னும் 16 -17 மாதங்களில் தேர்தல் நடக்கும். அதனால் இங்கே இப்போதே களப்பணிகளை செய்ய தொடங்குங்கள். பூத் கமிட்டியை அதிகரிக்க வேண்டும். அந்த பணிகளை இந்த மாவட்டங்களில் இருந்து தொடங்குங்கள் என்று அமித் ஷா சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக
பாஜகவில் நடக்கும் இந்த அதிரடி மாற்றங்களையும், பிளான்களையும் அதிமுக உன்னிப்பாக கவனித்து வருகிறதாம். பாஜக என்ன மாதிரியான இடங்களை கேட்கும். அதை கொடுக்கலாமா வேண்டாமா என்று அதிமுக ஆலோசனை செய்து வருகிறதாம். கட்டுப்படியாகும் இடங்களை கேட்டால் கொடுக்கலாம். இல்லையென்றால் அப்படியே கூட்டணிக்கு டாட்டா காட்டிவிடலாம் என்று அதிமுக தரப்பு திட்டம் போட்டு வருகிறதாம்.
-
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
Periasamy Kumaran: இங்கிலாந்திற்கான இந்தியாவின் புதிய தூதராக பெரியசாமி குமரன் நியமனம்! யார் தெரியுமா இவர்? -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை!












Click it and Unblock the Notifications