கொங்கில் 2.. டெல்டாவில் 1.. வசமாக வளருதே பாஜக.. நியூஸ் 18 சர்வேயில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை; தமிழ்நாட்டில் திமுக 30 இடங்களில் வெற்றிபெறும் என்று நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் பாஜக கூட்டணி 5 இடங்களில் வெற்றிபெறும் என்று நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எந்தெந்த மண்டலங்களில் பாஜக வெல்லும் என்றும் இந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி 4 இடங்களில் வெற்றிபெறும் என்று நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திமுக கூட்டணிக்கு 51 வாக்கு சதவிகிதம் கிடைக்கும். பாஜக கூட்டணிக்கு 13 சதவிகித வாக்குகள் கிடைக்கும். அதிமுக கூட்டணிக்கு 17 சதவிகிதம் கிடைக்கும் என்று நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கணிப்பில் கொங்கு மண்டலத்தில் பாஜக 2 இடங்களை வெல்லும் என்று, டெல்டாவில் 1 இடத்தில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, காஞ்சிபுரத்தை உள்ளடக்கிய சென்னை பகுதியில் 2 இடத்தை வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தென் தமிழ்நாட்டில் பாஜக ஒர இடத்தை கூட வெல்லும் வாய்ப்பு உள்ளதாக கணிப்பில் தெரிவிக்கப்படவில்லை.

BJP to get 2 seats in Kongu region and 1 seat in Delta region says Lok sabha election 2019 News 18 survey

காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), விசிக, ம.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு தேச மக்கள் கட்சி ஆகியவற்றுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை திமுக அமைத்து உள்ளது. இந்த கூட்டணி 30 தொகுதிகளையும் மொத்தமாக கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

திமுக கூட்டணி: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. தமிழ்நாட்டில் திமுக பிரம்மாண்ட கூட்டணியை அமைத்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்.

திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1
கொமதேக - 1

அதிமுக, பாஜக கூட்டணிகள் இன்னும் முடிவாகாத நிலையில், அதிமுக கூட்டணி 4 இடங்களில் வெற்றிபெறும் என்று நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.. பாஜக 5 இடங்கள் என்று அதிக இடங்களில் ஜெயித்தாலும் அவர்களின் வாக்கு சதவிகிதம் குறைவு என்று கணிப்பு தெரிவித்துள்ளது. அதிமுகதான் இரண்டாவது பெரிய கட்சியாக நீடிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

மற்ற கணிப்புகள்; 2024 மக்களவைத் தேர்தலில் பீகார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றிபெறும் என்று நியூஸ் 18 கருத்துக்கணிப்பு தெரிவித்து உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 இடங்களில் பாஜக 28 இடங்களைப் பெறும், இந்தியா கூட்டணிக்கு 1 இடம் கிடைக்கும்.

அதன்படி பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணி வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பிரதமர் மோடிக்காகவே பாஜகவுக்கு வாக்களிப்போம் என்று நியூஸ் 18 சிஎன்என் சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளன. பாஜகவுக்கு வாக்களிப்போம் என 85 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர் 518 நாடாளுமன்றத் தொகுதிகளில் 21 மாநிலங்களில் நியூஸ் 18 சிஎன்என் கருத்துக் கணிப்பு நடத்தியது குறிப்பிடத்தக்கது.,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+