தமிழ்நாடு, வங்கத்தை அடுத்து.. தெலுங்கானாவில் பாஜகவிற்கு பெரிய அடி.. போச்சே.. அதிர வைத்த சர்வே!
சென்னை: லோக்சபா தேர்தலில் தெலுங்கானாவில் பாஜக பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இப்போதே தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் வெளியாக தொடங்கி உள்ளன. பல்வேறு அமைப்புகள் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

ஆனால் இந்த கருத்து கணிப்புகள் எல்லாமே அப்படியே நடக்கும் என்றும் சொல்ல முடியாது. காரணம் தேர்தலுக்கு இன்னும் பல காலம் உள்ளது. கிட்டத்தட்ட 8 மாதங்கள் உள்ளன. அப்படி இருக்க என்ன வேண்டுமென்றாலும் அரசியல் களத்தில் நடக்கலாம்.
8 மாதங்கள் என்பது தேர்தல் அரசியல் களத்தில் மிக நீண்ட காலம் ஆகும். அதனால் கருத்து கணிப்புகள் அப்படியே நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் அரசியல் ரீதியாக கருத்து கணிப்புகள் ஒரு பிம்பத்தை உருவாகும். முக்கியமாக அரசியல் ரீதியாக தேர்தல் இப்படி செல்ல வாய்ப்பு உள்ளது என்று கணிப்பை உருவாக்கும்.
அரசியல் கட்சிகளும் கூட தயாராவதற்கு இது போன்ற கருத்து கணிப்புகள் உதவும். உதாரணமாக ஒரு கட்சிக்கு எதிராக கணிப்பு வருகிறது என்றால் அந்த கட்சி தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து கணிப்புகளை பொய்யாக்கவும் முடியும்.

கருத்து கணிப்பு: ஸ்மால் பாக்ஸ் இந்தியா சர்வே என்ற அமைப்பு இந்த புதிய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,
தமிழ்நாட்டில் திமுகவின் இந்தியா கூட்டணி - 36 இடங்களை வெல்லும்
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி - 03 இடங்களை வெல்லும்
தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில் வென்றது. அதிமுக 1 இடத்தில் வென்றது. இந்த முறை திமுக கூட்டணி 2 இடங்களை இழக்கும். பாஜக கூட்டணி கூடுதலாக இரண்டு இடங்களை பெறும். அதாவது தமிழ்நாட்டில் இருந்து பாஜக கூட்டணிக்கு 3 எம்பிக்கள் வருவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. இவர்கள் பாஜக கட்சியா, அதிமுக கட்சியா என்பது தெரிவிக்கப்படவில்லை.

கணிப்புகள்: சத்தீஸ்கர் மொத்த இடங்கள் (11):
பாஜகவின் என்டிஏ கூட்டணி - 04
இந்தியா - 07
தெலுங்கானா மொத்த இடங்கள் (17):
பாஜகவின் என்டிஏ கூட்டணி - 03
சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி- 08
இந்தியா கூட்டணி - 05
ஓவைசியின் எம்ஐஎம் கட்சி - 01
சண்டிகர், அந்தமான் மற்றும் நிக்கோபார்,
பாஜகவின் என்டிஏ கூட்டணி - 01
இந்தியா கூட்டணி - 01
மத்தியப் பிரதேசத்தின் மொத்த இடங்கள் (29)
பாஜகவின் என்டிஏ கூட்டணி - - 20
இந்தியா - 09












Click it and Unblock the Notifications