கமலாலயத்தில் அதிகாலை நடந்த ரகசிய பூஜை.. எதிரிகளை வீக் ஆக்க தலை ரூமில் ‘பரிகாரம்’.. லீக் ஆன மேட்டர்!
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் டாப் 'தலை' இன்று அதிகாலை ஒரு ரகசிய பூஜை நடத்தியுள்ளார். ரகசியமாக நடத்தினாலும், ஹோமப் புகையை மறைக்க முடியுமா? பாஜக வட்டாரத்திலிருந்து விஷயம் லீக் ஆகிவிட்டது.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் தற்போதைய தலைக்கும், டெல்லிக்குப் போன முன்னாள் தலைக்கும் தனித்தனியாக அறைகள் உள்ளன. தனது அறையின் கதவுகள் கண்ணாடியில் தான் அமைக்கப்பட்டிருக்கும், உள்ளே என்ன நடந்தாலும் வெளியில் தெரியும் என முன்பு ஒருமுறை சொன்ன தலை, தனது ரூமை நவீன வசதிகளோடு புதுப்பொலிவாக்க முடிவெடுத்துள்ளார்.

அதன்படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது அறையை புதுப்பிக்கும் பணிகளுக்காக கொடுத்துவிட்டு, கமலாலயத்திற்கே வராமல் இருந்து வரும் டெல்லி பிரமுகரின் அறையில் தனது அலுவல்களைப் பார்த்து வந்துள்ளார் தலை. தலையின் அறையில் நடைபெற்ற புதுப்பிக்கும் பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தன.
இதையடுத்து, பழைய தலையின் ரூமில் இருந்து புதிதாக பளபளத்த ரூமுக்கு இடம் மாறினார் அண்ணாமலை. ஆனால், அதன் பிறகு தனக்கு தொடர்ந்து சோதனைகளாகவே வந்து கொண்டிருப்பதாக தலைக்கு தோன்றி இருக்கிறது. தலைமை கொடுத்த முக்கிய பொறுப்பிலும் தோல்வி, தான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை என்று புழுங்கியுள்ளார்.
கட்சியின் தேசிய தலைமைஅவ்வப்போது டோஸ் விடுவதால் கடுமையான அப்செட்டில் இருக்கிறாராம். போதாக்குறைக்கு, தமிழ்நாடு பாஜகவில் இருக்கும் சில தலைகளும், தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருவதால் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார். எந்த நேரத்திலும் தனது பதவிக்கு ஆபத்து வரலாம் என்ற சூழலில், தலையின் தலை உருளுகிறதாம்.
இந்நிலையில் தான் தனது ஆஸ்தான ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அவரோ, உங்களுக்கு ராசி துவேசம் இருக்கிறது, ஜாதக ரீதியாக சில பரிகார பூஜைகளை நடத்தினால் பிரச்சனைகள் தீரும், எதிரிகள் பலம் இழப்பார்கள், நீங்கள் பயன்படுத்தும் அலுவலக அறையில் பூஜை நடத்துங்கள், அதன் பிறகு சுக்ர திசை தான் எனக் கூறியிருக்கிறார்.
வீட்டில் பூஜை என்றால் இரண்டாம் நபருக்கு தெரியாமல் நடத்திவிடலாம், கட்சி அலுவலகம் ஆயிற்றே என யோசித்தவர், கட்சியின் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் 'அமைப்பு' புள்ளியிடம் இந்த விஷயத்தைக் கூறியுள்ளார்.
அவரும், ஆமாம், பரிகார பூஜை செய்தால் நல்லது, கட்சிக்கும் நல்லதுதான், உடனே ஏற்பாடு செய்துவிடுவோம் என பச்சைக்கொடி காட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து, பரிகார பூஜைக்கான ஏற்பாடுகள், கமலாலயத்திற்கு அன்றாடம் செல்லும் நிர்வாகிகளுக்கே தெரியாமல் கடந்த சில நாட்களாக ரகசியமாக நடந்து வந்துள்ளன.
இன்று அதிகாலை 4 மணி அளவில் கமலாலயத்தில் தலை பயன்படுத்தும் அந்த அறையில் ரகசிய பூஜை நடைபெற்றுள்ளது. அவருடன் அமைப்புத் தலையும் இந்த ரகசிய பூஜையில் கலந்துகொண்டிருக்கிறார். கட்சியின் சீனியர்கள் உட்பட நிர்வாகிகள் வேறு யாரும் கலந்து கொள்ளவில்லையாம்.
சொந்தக் கட்சியினருக்கே தெரியாமல் கட்சி அலுவலகத்தில் ரகசியமாக பரிகார பூஜையை நடத்தினாலும், ஹோமப் புகை வெளியில் கசியாமலா இருக்கும்? கமலாலயம் தாண்டி இப்போது விஷயம் வெளியே கசிந்துவிட்டது.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்?












Click it and Unblock the Notifications