யாரு மேல கை வச்சிருக்கீங்க தெரியுமா.. சிக்குனீங்க போங்க.. பாஜகவுக்கு கரு.பழனியப்பன் மெசேஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவினர் ஓவியா ஆர்மி மீது கை வைத்துள்ளனர், அவருக்கு ஒரு ரசிகர் படையே இருக்கிறது என்று, இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துளள்ளார்.

Recommended Video

    BJP-யினர் Oviya Army மீது கை வைத்து விட்டனர் - கரு.பழனியப்பன்

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் கலப்பு திருமணம் புரிந்தோர் நலச்சங்கத்தினுடைய 21ம் ஆண்டு விழா நடைபெற்றது.

    இதில் இயக்குனர் கரு.பழனியப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் ஆகியோர் கலந்து கொண்டு சிற்ப்புரையாற்றினர் இந்நிகழ்வில் சாதி மறுப்பு திருமணம் செய்த 20 ஜோடிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    காதலர் தினம்

    காதலர் தினம்

    இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய கு.இராமகிருட்டிணன் இந்த காதலர் தின விழாவை பல சாதியவாதிகள் மதவாதிகளும் எதிர்க்கின்ற காரணத்தினாலேயே நாம் இது நிகழ்வை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி சாதிமறுப்பு திருமணத்தினால் தான் சாதி வெறியும் மத வெறியும் அடங்கும் கூறியது மிகவும் சிறப்பான ஒரு பதிவு என்று தெரிவித்த அவர் சாதி என்பது அரசு வழங்க கூடிய இட ஒதுக்கீடு போன்றவற்றிற்கு தானே தவிர திருமணங்களுக்கு அல்ல என்று தெரிவித்தார்.

    டிஜிபியிடம் புகார்

    டிஜிபியிடம் புகார்

    அதனை தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அனைத்து சாதியினர்களையும் அர்ச்சகர்களாக்க வேண்டும் என்பதை அமலாக்கிய கேரள அரசு அரசின் பிரதிநிதியாக இதில் கலந்து கொள்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறினார். திரைத்துறையில் இருக்கும் நடிகை 'Go back modi' என்று கூறியதற்கு டிஜிபி யிடம் புகார் அளித்து அச்சத்தை ஏற்படுத்துகின்றனர் என்று தெரிவித்தார்.

    தினமும் காதலர் தினம்

    தினமும் காதலர் தினம்

    அதனை தொடர்ந்து பேசிய இயக்குனர் கரு.பழனியப்பன், காதலை எதிர்ப்பவர்களுக்கு மட்டும் தான் ஒரு நாள் காதலர் தினம். காதலிப்பவர்களுக்கு அனைத்து நாளுமே காதலர் தினம் என்று தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் வரும் செய்தியை முழுமையாக கூட பார்க்காமல் தலைப்பினை மட்டும் பார்த்து கமெண்ட் செய்பவர்கள் தான் பாஜகவினர்.

    ஓவியா ஆர்மி

    ஓவியா ஆர்மி

    ஓவியா "Go back modi" என்று பதிவிட்டதற்கு புகார் அளித்துள்ளனர். ஓவியாவை ரஜினி என்று இவர்கள் எண்ணி கொண்டிருக்கின்றனர். ஆனால் ஓவியாவிற்கு ஒரு ஆர்மி உள்ளது. இவர்கள் ஓவியா ராணுவத்தின் மீது கை வைத்துள்ளனர் என்று தெரிவித்தார். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி படிப்பில் தமிழக அரசு 69% இட ஒதுக்கீடு பொருந்தாது 50% தான் பொருந்தும் என்று சொன்னால் அதை தட்டி கேட்பது திமுக, கம்யூனிஸ்ட், திராவிட கட்சிள்தானே தவிர மற்றவர்கள் எல்லாம் பேசாமல் இருப்பர். பல்வேறு கட்சிகள் பெரியாரின் பிம்பத்தை உடைக்க நினைக்கிறது அது முடியாது என்றும் காதலை வளர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார் கரு பழனியப்பன்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+