விஜய் அரசியல் பின்னணியில் பாஜக.. ரஜினி தப்பித்துவிட்டதால் இப்படி செய்கிறார்கள்.. கோவை சத்யன் பரபர
சென்னை: நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், இதில் பின்னணியில் பாஜக இருப்பதாக அதிமுக நிர்வாகி கோவை சத்யன் விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய் நேற்றைய தினம் தனது அரசியல் வருகை குறித்து அறிவித்தார். விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதாகவும் அவர் விரைவில் அரசியலுக்கு வரலாம் என்றும் கடந்த சில ஆண்டுகளாகவே தகவல் பரவி வந்தன. இந்தச் சூழலில் தான் நேற்று அவர் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் கட்சியைத் தொடங்கியுள்ளார். இதற்கான ஆவணங்களை விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் டெல்லி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார். விஜய் அரசியலுக்கு வந்துள்ளதைத் தமிழ்நாட்டில் பலரும் வரவேற்றே வருகின்றனர்.
விஜய் அரசியல்: இதற்கிடையே விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக பாஜக இருப்பதாக அதிமுக நிர்வாகி கோவை சத்யன் கூறிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசியலுக்குப் பின்னால் பாஜக இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
இது தொடர்பாகக் கோவை சத்யன் மேலும் கூறுகையில், "ஒரு வழியாகப் பூனைக் குட்டி இப்போது வெளியே வந்துவிட்டது. நடிகர் விஜய்க்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் ஆசைகள் இருந்தன, இப்போது தமிழ்நாடு அரசியலில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவிருக்கும் லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
பின்னணியில் பாஜக: தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. இதனால் இந்த நேரத்தில் பாஜக இந்த முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. பாஜக ரஜினிகாந்த்திடம் அரசியலுக்கு வர வற்புறுத்தினார். ஆனால் எப்படியோ தப்பித்துவிட்டார். இப்போது அடுத்த தூண்டில் விஜய்க்குப் போட்டுள்ளனர். காரணம் தமிழகத்தில் பாஜக வளர திரையுலகில் இருந்து ஒரு முகம் தேவை. அந்த தேவையை விஜய் பூர்த்தி செய்வார் என நம்புகிறார்கள்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால், சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்பு எப்படி இருக்கப் போகிறது என்பதே இங்குக் கேள்வி.. வெறும் 5 நிமிடங்களில் அனைத்தையும் மாற்ற.. அரசியல் ஒன்னும் சினிமா இல்லை. விஜய்யின் கனவு இதற்கு முன்பு நிறைவேறவில்லை. இப்போது பாஜக ஆதரவு இருப்பதால் அரசியலில் வெல்ல முடியும் என விஜய் நினைக்கிறார். ஆனால், அது நடக்காது.

லிஸ்ட் பெரியது: அரசியல் வேறு.. சினிமா வேறு என்பதைப் பொதுமக்கள் வேறுபடுத்தித் தான் பார்ப்பார்கள். கடந்த காலத்தில் இதற்குப் பல உதாரணங்கள் இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு நடிகர்கள் பலரும் அரசியலுக்கு வந்தனர். ஆனால், அவர்களால் வெற்றிகரமாக இருக்க முடியவில்லை. அரசியலுக்கு வந்து தோற்ற நடிகர்கள் தான் அதிகம். விஜயகாந்த், சரத்குமார் எனப் பலரைச் சொல்லலாம். ரஜினி வருவதற்கு முன்பே விலகிவிட்டார். அவர்கள் யாராலும் அரசியலில் வெற்றிகரமாக இருக்க முடியவில்லை.
கடைசியாகக் கமல்ஹாசன் கூட மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். ஆனால், இப்போது அவரே தனது கட்சியைக் கலைத்துவிட்டு திமுகவில் இணைந்துவிடுவது போலத் தான் இருக்கிறது. விஜய்யும் கூட இந்த லிஸ்டில் சீக்கிரம் இணைந்துவிடுவார் என்றே நினைக்கிறேன்" என்றார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications