சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவர்கள் இணைந்தால் யாராலும் அசைக்க முடியாது.. ரஜினி கமலை வைத்து பெரிய திட்டம் போடும் பாஜக!

பாஜக கட்சி நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை வைத்து தமிழக அரசியலில் பெரிய திட்டங்களை வகுக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினி கமலை வைத்து பாஜக போடும் பெரிய திட்டம்

    சென்னை: பாஜக கட்சி நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை வைத்து தமிழக அரசியலில் பெரிய திட்டங்களை வகுக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது.

    லோக்சபா தேர்தலில் நாடு முழுக்க காவி கொடி பறக்க தொடங்கிவிட்டாலும் தமிழகத்தில் மட்டும் பாஜகவால் என்ன செய்தும் கால் ஊன்ற முடியவில்லை. தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது.

    இதை சரிகட்ட மீண்டும் போட்டு வைத்திருந்த பழைய பிளானை தொடங்க பாஜக முடிவெடுத்துள்ளது. ஆம், தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் வெற்றிபெற, 2021 சட்டசபை தேர்தலில் வெற்றிபெற பாஜக முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்து இருக்கிறது.

    கட்சி தொடங்குவது எப்போது.. ரஜினி அளித்த பரபரப்பு பதில்கட்சி தொடங்குவது எப்போது.. ரஜினி அளித்த பரபரப்பு பதில்

    என்ன சந்திப்பு

    என்ன சந்திப்பு

    வரும் 30ம் தேதி நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து 30ம் தேதி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்க உள்ளார். இந்த நிலையில் இந்த பதவி ஏற்பு விழாவிற்கு அவர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    என்ன முறை

    என்ன முறை

    இதில் நடிகர் ரஜினிகாந்த் மோடியின் நண்பர் என்ற முறையில் பதவி ஏற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி கட்சித் தலைவர்கள் என்ற முறையில் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் கமல்ஹாசன் எதன் அடிப்படையில் அழைக்கப்பட்டு இருக்கிறார் என்று விவரம் வெளியாகவில்லை. இதற்கெல்லாம் பின் முக்கிய பிளான் ஒன்று இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

    பிளான்

    பிளான்

    அரசியல் வல்லுனர்களின் கூற்றுப்படி, அதிமுக, ரஜினி , மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் மூன்று பேரையும் ஒன்றாக இணைக்க பாஜக முயல்கிறது என்று தெரிவிக்கிறார்கள். ரஜினியும் கமலும் இணைந்து அரசியல் செய்தால் அவர்களை எந்த ஒரு கட்சியாலும் அசைக்க முடியாது என்று பாஜக நம்புகிறது. இதனால் இவர்களை அதிமுகவுடன் இணைத்து 2021 சட்டசபை தேர்தலுக்காக மெகா கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

    அஸ்திவாரம்

    அஸ்திவாரம்

    இதற்கு அஸ்திவாரம் போடவே டெல்லி சந்திப்பை ஏற்பாடு செய்து இருக்கிறார் மோடி என்கிறார்கள். இந்த ஐடியாவிற்கு ரஜினி ஓகே சொல்லிவிட்டதாகவே தெரிகிறது. மிகப்பெரிய தேர்தல் கூட்டணியை உருவாக்கி அதிமுக மூலம் தமிழக முதல்வராகும் எண்ணத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த். அதற்கு பாஜக உதவும் என்ற நம்பிக்கையிலும் அவர் உள்ளார்.

    கமல் எப்படி

    கமல் எப்படி

    ஆனால் கமல்ஹாசன் இதற்கு எல்லாம் ஓகே சொல்ல வழியே இல்லை. கமல்ஹாசனுக்கு தனித்து நிற்கவே விருப்பம். அவர் ரஜினியுடன் கூட சேர்ந்துவிடுவார் ஆனால் அதிமுக, பாஜகவுடன் சேர மாட்டார் என்கிறார்கள். இதனால் அதிமுக- பாஜக - ரஜினி கூட்டணியே இப்போதைக்கு உருவாக வாய்ப்புள்ளது. கமல்ஹாசனை 2021 தேர்தலில் தமிழகத்தின் சட்டசபை எதிர்கட்சித் தலைவராகவே அதிகம் விரும்புகிறார் என்கிறார்கள்.

    English summary
    BJP tries to unit Rajini Ganth and Kamal Haasan to play a mass game in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X