சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊரு விட்டு ஊரு வந்த கவர்னர வம்பிழுக்காதீங்க.. சட்டை கிழிஞ்சி போச்சுதுன்னா.. திமுகவை சீண்டும் பாஜக!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே உள்ள பிரச்சினையை காமெடியாக பாஜகவினர் திமுகவை டிரோல் செய்துள்ளனர். அதுவும் ஊரு விட்டு ஊரு வந்து பாடலில் வரிகளை மாற்றி செம காமெடியாக வைரலாக்கி வருகிறார்கள்.

Recommended Video

    ஊரு விட்டு ஊரு வந்த கவர்னர வம்பிழுக்காதீங்க.. திமுகவை சீண்டும் பாஜக - வீடியோ

    தமிழக ஆளுநருக்கும் முதல்வருக்கும் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் திருப்பி தமிழக அரசுக்கே அனுப்பினார். இதையடுத்து நீட் விலக்கு மசோதா மீண்டும் ஒரு முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    5 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.. தீயாய் வீசும் காற்று.. டெல்லி மக்களுக்கு எச்சரிக்கை 5 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.. தீயாய் வீசும் காற்று.. டெல்லி மக்களுக்கு எச்சரிக்கை

    அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பியும் அதை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் கிடப்பில் போட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை தமிழக அரசு முன் வைக்கிறது.

     ஆளுநர்

    ஆளுநர்

    மேலும் போஸ்ட்மேன் வேலையை கூட ஆளுநரால் செய்ய முடியாதா என்ற கேள்வியை முதல்வர் ஸ்டாலின் எழுப்பியிருந்தார். இதனால் ஆளுநர் விவகாரத்தில் திமுக- பாஜக இடையே கருத்து மோதல்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் திராவிட கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் சிலர் திமுகவை டிரோல் செய்துள்ளார்கள்.

     கரகாட்டக்காரன்

    கரகாட்டக்காரன்

    கரகாட்டக்காரன் படத்தில் வரும் ஊரு விட்டு ஊரு வந்து பாடலை அதன் வரிகளை மாற்றி டிரோல் செய்துள்ளார்கள். இது இணையத்தை கலக்கி வருகிறது. இந்தா வாயின்கோ மற்றும் ஜேடி வழங்கும் ஊரு விட்டு ஊரு வந்த எனும் பாடலை பாஜகவினர் வைரலாக்கி வருகிறார்கள்.

     அந்த பாடலின் வரிகள் இதோ:

    அந்த பாடலின் வரிகள் இதோ:

    ஊரு விட்டு ஊரு வந்த
    கவர்னர வம்பு இழுக்காதீங்க
    சட்டை கிழிஞ்சி போச்சுதுன்னா
    கம்ப்ளைண்ட் கொடுக்க ஆளில்லைங்க
    விட்டுடு உபி, இது வேணாம் உபி (உடன் பிறப்பு)
    மொத்தமும் போனா, அப்புறம் கூப்புதான் உபி (உடன்பிறப்பு)
    அண்ணாச்சி நீங்க, திராவிடர் என்று, வெளியே போய் சொல்ல வேண்டாம்
    ஆந்திராவிலிருந்து வந்தவர் யாரு ஆராய்ச்சி பண்ண வேண்டாம்
    திராவிட அரசியலில் சமத்துவம் சந்தி தான் சிரிக்கலையோ?
    வீட்டுக்கு வர சொல்லிட்டு ஓட்ட ப்ளாஸ்டிக் சேரும் தான் குடுக்கலையா?
    உங்கள மீறிதான் வாழ்ந்தவர் உண்டோ?
    இல்லே இல்லே
    குடும்பத்தை தாண்டிதான் வளர்ந்தவர் உண்டோ?
    இல்லே இல்லே
    விடியல் ஆட்சிடா.. கரண்ட் போச்சுடா...

     திமுகவை டிரோல் செய்யும் பாஜக

    திமுகவை டிரோல் செய்யும் பாஜக

    இவ்வாறாக பாடல் வரிகள் உள்ளன. இந்த வீடியோ 2 நிமிடங்கள் 18 வினாடிகள் ஓடக் கூடியது. இந்த வீடியோவை ரீட்வீட் செய்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் காமெடியாக சிரிப்பை வரவழைக்கிறது என கமென்ட் போட்டுள்ளார். பொதுவாக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பழைய பாடல்களின் வரிகளை மாற்றுவர். பாஜக , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் அந்தந்த மாநிலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்த டிரென்ட்டை கையில் எடுத்திருக்கலாம். இந்த நிலையில் திராவிடக் கொள்கைகளுக்கு எதிரானவர்களும் இது போன்று பாடல் வரிகளை மாற்றி எழுத கூடிய டிரென்ட் செட்டை உருவாக்கியுள்ளார்கள்.

    English summary
    BJP trolls DMK in the issue of Governor using Oora vittu Oora vanthu song.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X